top of page
Image by Ambitious Studio* | Rick Barrett

ALL INDIA

ASPIRING WRITER's

AWARD

RAJASEKARAN A

REGISTRATION ID

B6693

YOUR FINAL SCORE IS IN BETWEEN

9.21 - 9.75

IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
YOUR FINAL SCORE WILL BE ANNOUNCED IN THE AWARD CEREMONY.

1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE  WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU. 
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.


click on the below link to know more information about the FINAL ROUND



 

Written By

RAJASEKARAN A

அது ஒரு நல்ல நாள்... கல்லூரியின் முதல் தொடக்க நாள்....தென்றல் சிலு சிலுவென வீச ...மரங்கள் மலர் தூவி வரவேற்றது போல் இருந்தது அவனுக்கு....அந்த கல்லூரியில் அவன் தனது வகுப்பறையைத் தேடினான்...இறுதியாக அவன் தனது வகுப்பறையை கண்டுபிடித்தான்..
அந்த வகுப்பறையில் ஒரு மூலையில் அமர்ந்தான்.முதல் நாளில் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் வந்தனர்.இவன் மட்டும் தனிமையில் அமர்ந்திருந்தான்.
அப்போது ஒருவன் வந்து அவன் அருகில் அமர்ந்தான். யாரும் தன்னருகில் அமர மாட்டார்கள் என இருந்த அவனுக்கு அது சற்று ஆறுதலாக இருந்தது...அது நிலைக்காது என நினைத்தான். ஆனால் அவன், பெயரைக் கேட்டான். இவன் ராஜேஸ் எனக் கூற,சுதேஷ் எனக் கூறி அறிமுகமானான். நண்பர்களாக இருப்போம் எனக்கூறினான். தயங்கிய ராஜேஸ் பின்னர் ஒத்துக்கொண்டான். சுதேஷ் அவனின் தோல் மீது கை போட்டான். முதல் அனுபவம் என்பதால் அதை ரசித்தான்.
நண்பர்களாக சில மாதங்கள் கடந்தன. இருவரும் ஒரு கோவிலுக்கு சென்றனர். ராஜேஸ் தன்னையே அறியாமல் அழத்தொடங்கினான். சுதேஷ் அவனை ஆறுதல்படுத்த அணைத்துக்கொண்டான். பின்னர் விசாரித்தான், நடந்த சம்பவத்தைக்கூறினான். சிறு வயதில் ராஜேஸ் தனது பெற்றோர் மற்றும் தனது தம்பி தங்கையுடன் மகிழுந்தில் சென்றுள்ளான். அப்பொழுது விளையாட்டாக செய்தது விபரீதத்தில் முடிந்தது. தம்பி செய்த குறும்புத்தனத்தால் அவனைக் கோவத்தில் அடிக்க சென்றவன் மகிழுந்தை ஓட்டிக்கொண்டிருந்த தனது தந்தையின் முகத்தில் தவறுதலாக அடித்துவிட்டான். அப்போது மகிழுந்து தடுமாறி அருகில் வந்த வாகனத்தின்
மீது மோதியதில் தனது மொத்தக் குடும்பத்தையும் இழந்தான். அனாதையாக நின்ற அவனை கவனிக்க மனம் இல்லாமல் காப்பகத்தில் சேர்த்தனர் அவனது உறவினர்கள். அங்கு வளர்ந்ததால் நண்பன் என்று யாரும் இல்லை, நண்பனாக நீ கிடைத்தது வரம் என சுதேஷை கட்டியணைத்து அழுதான். அவனும் "நான் இருக்கிறேன் உனக்காக" எனக்கூறி கண்ணீரைத் துடைத்தான். அதில் இருந்து சுதேஷ் அவனை நன்றாக பார்த்துக்கொண்டான். ராஜேஸ் நன்றாக படிப்பான் என்பதால் தேர்வில் பல தில்லாலங்கடி வேலை செய்து சுதேஷுக்கு உதவுவான். ஒரு நாள் அவர்களது துறைத்தலைவர் அம்மா பெற்றோர் ஆசிரியர் கூட்டம் வைத்திருந்தார். அப்போது மாணவர்கள் அனைவரும் தங்களது பெற்றோர்களை அழைத்து வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் சுதேஷ் தனது பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் அவன் அம்மாவிற்கு எப்படியோ தெரிந்து விட்டது. கல்லூரிக்கு சுதேஷின் ஆசிரியரை பார்க்க வந்தார் அவனது அம்மா.சுதேஷ் தனது அம்மாவிற்கு மிகவும் பயந்தவன் என்பதால் ஓடி ஒளிய ஆரம்பித்தான். அப்போது துறைத்தலைவர் அம்மா, சுதேஷ் இரு பாடங்களில் தோல்வி அடைந்திருப்பதை கூறினார்கள் மாட்டிக்கொண்டோம் தப்பிக்கவா முடியும் எனக்கூறி அவன் அம்மாவிடம் சென்றான். அப்போது ராஜேஸை காண்பித்து இவனுடன் தான் இருக்கிறான் இவன் எவ்வளவு நன்றாக படிக்கிறான் என ஒப்பிட்டு கூறினார் துறைத்தலைவர் அம்மா, கடும் கோபத்தில் இருந்து சுதேஷின் அம்மா அவனை நன்றாக திட்டினார்கள்... சுதேஷ் மன வருத்தத்துடன் அங்கிருந்து சென்றான். ராஜேஸ் துறைத் தலைவர் அம்மா மீது கோபமடைந்தான். தனது நண்பனை ஒப்பிட்டு பேசியதற்காக கடும் கோபமடைந்தான். அவர்களிடம் சண்டையிட்டான். தன் நண்பனை தன்னிடம் ஒப்பிட்டு பேசியது பிடிக்கவில்லை என்றும், இனிமேல் அவன் தன்னுடன் சகஜமாக பழக மாட்டான் என நினைத்து கத்தினான்.. அதிலிருந்து துறைத் தலைவர் அம்மா சுதேஷை படிப்பு விஷயத்தில் எதுவும் கூற மாட்டார்கள். ஆனால் சுதேஷ் பந்தா என்று நினைத்து செய்யும் சில விஷயங்களை வைத்து சுதேஷை வம்புக்கு இழுப்பார்கள். வருத்தத்துடன் சுதேஷிடம் சென்றான்... ராஜேஸ் மன்னிப்பு கூறினான்... ஆனால் சுதேஷ் "அவர்கள் என்ன கூறினாலும் நீ என் நண்பன் தானடா" என கூறினான்.. "பரவாயில்லை, நீ எதையும் நினைத்துக் கொள்ளாதே. அது அரக்கி தான் என நமக்கு தெரியுமே" என சுதேஷ் சிரித்துக்கொண்டே கூறினான். அதன்பின் இருவருக்கும் கல்லூரி வாழ்க்கை அழகான நிகழ்வுகளுடன் சென்றது.அப்போது சுதேஷ் தனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருப்பதாகவும், அப்பெண்ணும் தன்னை பார்ப்பதாகவும் கூறினான். அவள் பெயர் ருபினா. இவன் பார்க்க அவள் சிரித்தாள். உடனே அவனும் வெட்கத்தில் சிரித்தான். நாட்கள் மெல்ல ஓடியது. சுதேஷ் தனது மேஜையை பார்த்தான். அதில் ஒரு கைக்கடிகாரம் இருந்தது. அதை தனது கையில் கட்டிக் கொண்ட அவன் ருபினாவை பார்த்தான். எப்படி இருக்கிறது என்று கேட்டான், அவளும் நன்றாக இருப்பது போல் சைகை காண்பித்தாள். அப்பொழுது யோசித்துக்கொண்டான், ருபினா தான் தனது இருக்கையில் கைக்கடிகாரத்தை வைத்திருப்பாள் என்று.அவன் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வயப்படத் தொடங்கினான். அவ்வப்போது அவனது இருக்கையில் பல பரிசுப் பொருட்கள் இருந்தன. ஒவ்வொரு முறையும் அதனை ருபினாவிடம் கேட்க நன்றாக இருப்பது போன்று தலையசைத்தாள்.
காதல் மோகத்தில் சுதேஷ் தனது நண்பனை கண்டு கொள்ளவில்லை. ஒதுக்க ஆரம்பித்தான். இதனால் ராஜேஸ் மன உளைச்சலுக்கு உள்ளானான். ஆனால் தனது நண்பனின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக கருதி கண்டுகொள்ளாமல் இருந்தான். ஆனாலும் காதல் பைத்தியத்தில் சுதேஷ் அவனிடம் வந்து புலம்புவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆதலால் அந்தக் காதலையும் சுதேஷின் குறும்புத்தனத்தையும் ரசித்தான். இப்படியே சில காலம் சென்றது தனது காதலை ருபினாவிடம் சொல்ல முடிவு செய்தான். ஆனால் சுதேஷுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதை ராஜேஸிடம் கூறினான் அவனும் தைரியம் அளித்தான். காதலை சொல்லப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் சுதேஷ் இருந்தான். அந்த நேரமும் வந்தது.ருபினா சாலையோரம் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தாள். அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு இருவரும் சென்றனர். சுதேஷ் தனது நண்பனான ராஜேஸை வெளியே இருக்கும்படி சொன்னான் . ராஜேஷ் வெளியே காத்திருந்தான். நற்செய்தியோடு வருவான் என இருந்த அவனுக்கு சுதேஷின் முகத்தைக் கண்டதும் குழப்பமடைந்தான். என்ன நடந்தது என கேட்டான், என்னை தனியாக விடுடா என சுதேஷ் கோபம் கொண்டான். சுதேஷ் உள்ளே நடந்தவற்றை நினைத்து பார்த்தான்.சுதேஷ் உள்ளே சென்றதும் தன் மனதில் இருப்பதை ருபினாவிடம் கூறினான். அதற்கு ருபினாவும் தான் காதலித்ததை சுதேஷிடம் ஒத்துக்கொண்டாள். அவளும் அவன் வாயால் கேட்கதான் காத்துக் கொண்டிருந்தாள்.சுதேஷிற்கு இருந்த மகிழ்ச்சியை கூற வார்த்தைகளே இல்லை... சொர்க்கத்தில் மிதப்பது போல் உணர்ந்தான். ருபினாவும் வெட்கப்பட்டாள்.நீ கொடுத்த பரிசுப் பொருட்கள் நன்றாக இருந்ததாக கூறினான். தான் எதுவும் வைக்கவில்லை என கூறினாள் ருபினா. "அப்போ கைக்கடிகாரத்தை பரிசாக வைத்தது யார்" என சுதேஷ் வினவினான். "நான் வைக்கவில்லை" என்று ருபினா கூறினாள். அப்பொழுது, "நன்றாக இருக்கிறது என ஏன் கூறினாய்" எனக் கேட்டான். "நீ காண்பித்தாய் அதனால் நன்றாக இருந்தது என கூறினேன்" அப்படி என்று ருபினா சிரித்துக் கொண்டே கூறினாள். "அப்பொழுது மேசைக்கடியில் பரிசு பொருட்களை யார் வைத்தது" என கேட்டான். தான் அல்ல என்று ருபினா கூறினாள். "வேறு யாராவது வைத்திருப்பார்கள் நீ அதை தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல எனக் கூறினாள்". எதுவும் கூறாமல் மிகப்பெரிய மகிழ்ச்சி மற்றும் சிறிய குழப்பத்துடன் வெளியே சென்றான்,இதை நினைத்துக் கொண்டபடியே சாலையைக் கடக்க இருவரும் முயன்றனர். அப்பொழுது எதிரில் வந்த வாகனம் அவர்கள் இருவரையும் மோதுவது போல் வந்தது, அதை கவனித்த ராஜேஸ், சுதேஷை தள்ளிவிட்டு அவன் உயிரை காப்பாற்றினான். ஆனால் அந்த வாகனத்தின் பிடியில் ராஜேஸ் மாட்டிக் கொண்டான். அதிக ரத்த காயத்துடன் சாலையில் கிடந்தான்... இதனால் சுதேஷ் மிகவும் பதற்றம் அடைந்தான். ராஜேஸை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ருபினா உதவியை நாடினான். இருவரும் ராஜேஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ருபினா,ராஜேஸ் தான் வழக்கமாகக் கொண்டு வரும் புத்தகப் பையை சுதேஷிடம் கொடுத்தாள், பின் கிளம்பிவிட்டாள். அதில் ராஜேஸின் டைரி இருந்தது, அதைப் படிக்க தொடங்கினான்.அதில் ராஜேஸ் அம்மா அப்பா இல்லாத தனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்தவன் சுதேஷ் என எழுதி இருந்தான்... அப்பொழுது தான் தெரிந்தது பரிசுப் பொருட்களை தனது மேசைக்கடியில் வைத்தது ராஜேஸ் தான் என்று... ஆனால் ராஜேஸ் அதை மறைக்க வேண்டும் என
நினைக்கவில்லை, சுதேஷ் அவன் தான் வைத்திருப்பான் என்று நினைத்து தன்னிடம் கேட்பான் என இருந்தான்... ஆனால் அவன் அதைக் கேட்கவில்லை என்பதால் விட்டு விட்டதாக எழுதியிருந்தான்..... சுதேஷ் ருபினாவை காதலிப்பதில் தன்னை கண்டுகொள்ளாததில் மன வருத்தத்தில் இருந்ததாக எழுதி இருந்தான்.அதை நினைத்து கண் கலங்கி சற்று அழுது கொண்டிருந்தான்... மருத்துவர்கள் வெளியே வந்து சுதேஷை அழைத்து அதிக ரத்தம் வெளியேறிவிட்டதால் ரத்தம் தேவை என கேட்டனர். ரத்த வங்கியை அணுகி "ஓ" வகை இரத்தத்தை கேட்டனர். அவர்கள் இல்லை எனக் கூறிவிட்டனர். தனக்கும் அதே ரத்த வகை தான் என கூறினான் சுதேஷ். சுதேஷின் ரத்தத்தை ராஜேஸிற்கு ஏற்றினர். ஆனால் மருத்துவர்கள் ராஜேஸின் உயிரை காப்பாற்ற முடியாது எனக் கூறினர், பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவுதான் என கூறினர் மருத்துவர்கள் . ஏன் என வினவினான் சுதேஷ். அதற்கு மருத்துவர்கள் விபத்து நடப்பதற்கு முன்னரே அவர் ஏதோ மனக்கவலையில் இருந்திருக்க வேண்டும் எனக் கூறினர். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த அவனுக்கு விபத்து ஏற்பட்ட அதிர்ச்சி அவன் உயிருக்கு ஆபத்தாய் அமைந்ததை கூறினார்கள்.அப்போது, தான் கோவத்தில் கூறியது தான் காரணமாக இருக்கும் என்று நினைத்தான். பின்னர் இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவனது இதயம் நின்று விடும் என்று மருத்துவர்கள் கூறினர். இதய மாற்று அறுவை சிகிச்சையே ஒரே வழி என கூறினர்... ஆனால் "ஓ" ரத்த வகை இதயம் கிடைப்பது மிகவும் கடினம் எனக் கூறினர்.. சற்றும் யோசிக்காமல் சுதேஷ் தனது இதயத்தை பொருத்துமாறு கேட்டுக் கொண்டான், தன்னை கருணைக்கொலை செய்யும்படி மன்றாடினான். மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் சுதேஷின் இதயம் ராஜேஸின் இதயத்திற்கு சரியாகப் பொருந்தியது, ஆனால் மருத்துவர்கள் கருணை கொலை செய்வதற்கு மறுத்துவிட்டனர். கருணை கொலை செய்வது சட்டப்படி குற்றம் எனக் கூறினர். ஆனால் சுதேஷ் பிடிவாதமாக அவனுக்கு யாரும் இல்லை என்றும், அப்பா அம்மா இல்லாதவன் என்றும் கூறினான், அவன் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை என தனக்குத் தெரியும் , ஆனால் என் ராஜேஸிற்கு அழகான குடும்பத்தை தர நினைக்கிறேன், அந்த வாழ்க்கையை வாழ அவன் உயிரோடு இருக்கவேண்டும் எனக் கெஞ்சி கேட்டான்,மறுத்துவிட்டனர் மருத்துவர்கள்.
என்ன செய்வது என்று யோசனையிலேயே இருந்தான். ஒரு கடிதத்தை எழுதத் தொடங்கினான். முடித்ததும் உடனே அருகில் இருந்த அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் தனது கழுத்தை குத்திக் கிழித்தான். ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவர்களிடம் ஓடினான்.
இப்பொழுது தன் இதயத்தை பொருத்துமாறு கேட்டுக் கொண்டான் ஆனால் மருத்துவர்கள் சுதேஷை காப்பாற்றவே முயன்றனர்... முடியாது என நினைத்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தனர் இதயத்தை மாற்றி ராஜேஸுக்கு பொருத்தினர். கண் முழிக்க ஒரு நாள் ஆகும் என மருத்துவர்கள் நினைத்தனர். அடுத்த நாள் காலையில் கண்விழித்தான் ராஜேஸ். ருபினா ஒரு கடிதத்தை ராஜேஸிடம் கொடுத்தாள். அதைக் கொடுத்தவுடன் கண்கலங்கினாள் ருபினா. அந்தக் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினான் ராஜேஸ். அதில்......சுதேஷ் அவனது டைரியை படித்ததை தெரிந்து கொண்டான்...சுதேஷ் தான் செய்த தவறுக்கும் செய்யப்போகும் தவறுக்கும் மன்னிப்பு கேட்பதாக எழுதி வைத்திருந்தான்... அப்பொழுது ருபினா ஸ்டெதஸ்கோப்புடன் வந்து இதயத்துடிப்பை கேட்டாள். தனது காதலனின் இதயத் துடிப்பை கேட்டு அழத் தொடங்கினாள்... அழுகையை அடக்க முடியாமல் அவ்விடத்திலிருந்து போய்விட்டாள்... அதன்பின் அந்த கடிதத்தில் தான் செய்யவிருந்த காரியங்களை எழுதி வைத்திருந்தான் சுதேஷ். அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது சுதேஷ் உயிரோடு இல்லை என்று... மீண்டும் தன்னை அனாதையாக மாற்றி விட்டயேடா என அழுதான். தாயை இழந்த க குழந்தையைப் போல் தன்னை உணர்ந்தான்...
சுதேஷ் அதில் "என்னை உலகமாக நினைத்த உன்னை இவ்வுலகை விட்டுப் போக விட மாட்டேன். நீ நன்றாக வாழ விரும்புகிறேன், உனக்காக ஒரு அழகான குடும்பம் காத்திருக்கிறது. அந்த அழகான வாழ்க்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்...என்றும் நீ சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் எதற்காகவும் கண்கலங்காதே. அதுவே எனது ஆசை.நான் எப்போதும் உனக்குள் தான் இருப்பேன் உன்னுடைய இதயமாக என்றும் உன் நண்பனாக" என்று எழுதியிருந்தான் ..... இறுதியாக குட் பாய் மை ஃபிரண்ட் என எழுதி வைத்திருந்தான் ராஜேஸின் கண்ணீர் அவ்வார்த்தையில் இருந்த FRI ஐ அளித்தது.அழுதபடியே ராஜேஸ் மயங்கினான்... சுதேஷின் உடல் அழிந்தாலும் என்றும் தனது ராஜேஸின் இதயமாக வாழ்ந்துகொண்டுதான் இருப்பான்........ முடிவு........

PLEASE CHECK YOUR PHOTO

RAJASEKARAN A

ABOVE SHARED PHOTOGRAPH WILL BE USED IN THE CERTIFICATE AND DONT WORRY IF THE ALLIGNMENT IS NOT CORRECT. IT WILL BE CORRECTED DURING CERTIFICATE DESIGN. 

ALSO THE NAME MENTIONED BELOW THE PHOTOGRAPH WILL BE WRITTEN ON CERTIFICATE. 

bottom of page