top of page
ALL INDIA
ASPIRING WRITER's
AWARD
Sivagami V
REGISTRATION ID
B0331
YOUR FINAL SCORE IS IN BETWEEN
9.21 - 9.75
IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
YOUR FINAL SCORE WILL BE ANNOUNCED IN THE AWARD CEREMONY.
1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU.
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.
click on the below link to know more information about the FINAL ROUND
Written By
Sivagami V
ஊஞ்சல்
கணவனை இழந்த இசையரசி, அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து தன் ஒரே மகளை படிக்க வைக்கிறாள். மகள் சத்யாவுக்கு எப்போதெல்லாம் பள்ளி விடுமுறையோ, அப்போதெல்லாம் அவளைக் கூடவே அழைத்துச் சென்று விடுவாள். பல வீடுகள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில், இசையரசிக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைப்பது ரம்யாவின் வீட்டில் மட்டும் தான். அது மட்டுமல்ல, ரம்யா அதிகமாக வேலை வாங்குவதில்லை; கண்ணியமாக நடத்துவாள். ரம்யாவின் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். ரம்யாவுக்கு 10 வயதில் வினிஷா என்ற பெண் குழந்தை இருப்பதால், சத்யாவுக்கும் நாள் முழுவதும் விளையாட்டுத் துணை கிடைக்கும்.
“நாளைக்கு சனிக்கிழமை. உனக்கு வேற லீவு. நீ ரம்யாம்மா வீட்டில் இருந்து படித்துக் கொண்டிரு. நான் வேலையை முடித்து விட்டு, உன்னை அழைத்துக் கொள்கிறேன். காலையில் சீக்கிரம் கிளம்பு. சரியா?” என்று மகள் சத்யாவிடம் சொல்லிக்கொண்டே பாயை விரித்தாள் இசையரசி. ஓடி வந்து அம்மா அருகில் படுத்துக் கொண்ட சத்யா, “அம்மா! இந்த தடவை நான் வரல. நீ மட்டும் போயிட்டு வா. நான் வீட்டிலேயே இருந்துக்கறேன். தனியா இருந்துப்பேன். நீ பயப்படாம போயிட்டு வாம்மா.” என்றாள். இசையரசியோ “அப்படியெல்லாம் விட முடியாது. ரம்யாம்மா வீட்டில் உனக்கு என்ன பிரச்சனை? அங்கே, உன்னோடு விளையாடுறதுக்கு வினிஷா இருக்கா. இங்கே, நீ தனியா என்ன செய்வ சொல்லு?” என்றாள்.
“வினிஷா கூட சண்டை போட்டுட்டேன். நான் இனிமேல் அங்கே வரமாட்டேன்.”
“என்னடி பெரிய சண்டை”
“அவங்க வீட்டுல போன வாரம் புதுசா ஒரு ஊஞ்சல் இருந்துச்சுல்ல..”
“ஆமா! ரம்யாம்மா வீட்டுக்காரர் வாங்கி அனுப்பியிருக்காரு. அதுக்கு என்ன?”
“அது மாதிரி எனக்கும் வேணும். நீ வாங்கித் தா. அப்புறம் தான் நான் வினிஷா வீட்டுக்கு வருவேன்.”
“என்னது !”
“வினிஷா என்ன சொன்னான்னு தெரியுமா? அது அவளோட அப்பா வாங்கி தந்த ஊஞ்சலாம். அதுல நான் உட்கார கூடாதாம். சும்மா தொட்டு பாத்ததுக்கே திட்டுறா. அதனால, நம்ம வீட்டுலயும் புதுசா ஊஞ்சல் வாங்குறோம். அதுக்கப்புறம் தான் நான் வினிஷா வீட்டுக்கு வருவேன்.”
“ஏய்! உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. அந்த வீட்ல இருக்கிற பொருள் எல்லாம் பார்த்து அது மாதிரி வேணும்னு கேட்க கூடாதுன்னு. அது மாதிரி எல்லாம் நம்மால் வாங்க முடியாது. நீ நல்லா படிச்சு பெரிய பொண்ணாகி, அதெல்லாம் வாங்கிக்கோ. என்னால பீஸ் கட்டி உன்ன நல்ல ஸ்கூல்ல சேர்த்து விட மட்டும் தான் முடியும். அதுக்கு மேல நீ தான் எல்லாம் பாத்துக்கணும்.”
“ஐயோ! போதும்! எப்ப பாத்தாலும் இதையே சொல்லிக்கிட்டு! இப்போ என்ன, நாளைக்கு உன் கூட வரணும், அவ்வளவுதானே!”
மறுநாள், தன் மகள் சத்யாவிடம், “ஊஞ்சல் பக்கம் போகக்கூடாது. ஒழுங்காக படித்து கொண்டோ, படம் வரைந்து கொண்டோ இருக்க வேண்டும்.” என்று பக்கம் பக்கமாக அறிவுரை செய்தாள் இசையரசி. ரம்யாவிடம் சொல்லி, சத்யாவை அங்கே விட்டுவிட்டு, வேறு வீடுகளுக்கு வேலைக்குச் சென்று விட்டாள். ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரம்யாவுக்கு, பல சனிக்கிழமைகளில் வேலை இருக்கும். இன்றும் அப்படித்தான். பெட்ரூம் கதவை சாத்திவிட்டு லேப்டாப்புக்குள் மூழ்கி விட்டாள் ரம்யா.
சத்யா, ஹாலில் உள்ள ஊஞ்சலுக்கு எதிரே அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கினாள். வினிஷா அப்போது தான் குளித்துவிட்டு வந்தாள். சத்யாவை பார்த்தவுடன், “ஹே! சத்யா! வந்துட்டியா! எங்க வராம போயிடுவியோன்னு நினைச்சேன். நீ போன சனிக்கிழமை அப்படித்தானே சொல்லிட்டு போன! உங்க வீட்ல புது ஊஞ்சல் வாங்கிட்டீங்களா?” சத்யா எதுவும் பேசவில்லை. வீட்டுப் பாடத்தில் கவனம் செலுத்துவது போல பாசாங்கு செய்தாள்.
வினிஷாவுக்கு கோபம். கொஞ்ச நேரம் கழித்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடத் தொடங்கினாள். வேகமாக ஆடி, அவளுடைய கால்கள் சத்யாவின் முகத்துக்கு அருகே வரும்படி செய்தாள். கடுப்பான சத்யாவோ எழுந்து போய் வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டாள். சத்யா பேசாமல் போனது வினிஷாவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஊஞ்சலை நிறுத்தி, சத்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள். “ஏன்டி இப்படி பண்ற? போன வாரம் நான் என் சைக்கிளைக் கூட உனக்கு கொடுத்தேன்ல! என் கூட பேச மாட்டியா?” என்றாள். சத்யா அமைதியாகவே இருந்தாள்.
“இப்போ என்ன! நீ ஊஞ்சலாடணுமா? இன்னைக்கு நீ மட்டுமே ஊஞ்சலாடு. நான் ஊஞ்சல் கிட்டயே வர மாட்டேன், போதுமா! என்றாள் வினிஷா. சத்யாவுக்கு இன்ப அதிர்ச்சி. ஆனால், வினிஷா தன்னை பிராங்க் செய்கிறாளோ என்று தோன்றவே, அமைதி காத்தாள். சத்யா எதுவுமே பேசாதது வினிஷாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அங்கிருந்து சென்று, தன் டேப்லெட்டை எடுத்து வந்து வீடியோ கேம் ஆடத் தொடங்கினாள். “ஏய்! இங்க பாரு! இந்த கேம் உனக்கு ரொம்ப பிடிக்குமே! வா, விளையாடலாம்! நீ ஒரு கேம். நான் ஒரு கேம். மாத்தி மாத்தி விளையாடலாம். வா, சத்யா!” என்றாள்.
சத்யாவுக்கு டேப்லெட் பற்றிய முந்தைய நினைவுகள் வந்தது. ஊஞ்சலை போலவே, டேப்லெட் வந்த புதிதில் அதை வினிஷா தனக்கு தரவில்லை. தானே வைத்து விளையாடினாள். கொஞ்ச நாள் கழித்து தான் தன்னிடம் விளையாடக் கொடுத்தாள். அப்போதும், தான் தப்பாக ஏதும் செய்து விட்டால் ஏளனம் செய்வாள். ‘இது கூட தெரியாதா!’ என்று சிரிப்பாள். அது மாதிரி, இப்போது ஊஞ்சலை கொடுத்தாலும், நிச்சயமாக ஏதாவது ஏளனம் செய்வாள். அதனால், வினிஷாவிடம் எதுவும் பேச வேண்டாம் என்று சத்யா முடிவெடுத்தாள். ஆனால், எப்படி வினிஷாவை தவிர்ப்பது என்பது அவளுக்கு புரியவில்லை. “நான் அம்மாவை பாத்துட்டு வரேன்” என்று சொல்லி அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அம்மா சொன்ன அடையாளத்தின் படி, வீட்டைத் தேடிப் பிடித்து வந்தாள் சத்யா. அந்த வீட்டில் புதிதாக குழந்தை பிறந்துள்ளது. தொட்டில் கட்டி இருந்தார்கள். சத்யாவை பார்த்ததும், “ஏன்டி இங்க வந்த? இன்னும் கொஞ்ச நேரத்துல நானே அங்க வந்துடுவேன்ல!” என்றாள் இசையரசி. சத்யா எதுவும் பேசாமல், அங்கே ஊஞ்சலைப் போல இன்னொரு தொட்டில் கட்டி இருப்பதை பார்த்தாள். “அம்மா! இந்த வீட்ல ரெண்டு பாப்பா இருக்கா? ரெண்டு தொட்டில் இருக்கு?” என்றாள். “அது எதுக்கு உனக்கு? இந்த வீட்ல இருக்கிற பையன் விளையாடுறதுக்காக சேலையை ஊஞ்சல் மாதிரி கட்டி இருக்காங்க. சரியான சேட்டைக்காரப் பையன்!” என்றாள் இசையரசி. இதைக் கேட்டதும் சத்யாவுக்கு புதிய யோசனை வந்தது.
“சரிம்மா! நான் கிளம்புறேன்!” என்றபடி வினிஷா வீட்டுக்கு வந்தாள் சத்யா. “ஹேய்! எங்கடி போன? உங்க அம்மாவ பாத்தியா இல்லையா? வழி மாறி வேற வீட்டுக்கு போயிட்டியா?” ஏளனமாகக் கேட்டாள் வினிஷா. “அதெல்லாம் ஒன்னுமில்ல. அம்மாவை பார்த்து பேசிட்டு தான் வரேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்களாம்.” என்றாள் சத்யா. “சரி! ஊஞ்சல் ஆடலாம் வரியா?” என்று அழைத்தாள் வினிஷா.
“அதெல்லாம் வேணாம். எங்க வீட்டிலேயே ஊஞ்சல் இருக்கு. நான் அங்கேயே ஆடிக்குவேன். இந்த ஊஞ்சலை விட அதுதான் ரொம்ப நல்லா இருக்கும்.” என்றாள் சத்யா. அவள் மனத்திரையில், அம்மாவின் சேலை ஊஞ்சலில் முன்னும் பின்னும் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள். சேலை ஊஞ்சலுக்கு காசு தேவை இல்லையே!
“என்னது! உங்க வீட்டில் ஊஞ்சல் இருக்கா?” ஆச்சரியமாகக் கேட்டாள் வினிஷா. சத்யா ஆமோதித்ததில் சற்று ஏமாற்றமடைந்த வினிஷா, “அப்போ இந்த டேப்ல விளையாடு” என்று டேப்லெட்டை நீட்டினாள்.
“வேணாம், வினிஷா! எனக்கு டேப்ல விளையாட போரடிக்குது! எங்க பக்கத்து வீட்டு பையன், பம்பரம், கோலி எல்லாம் விளையாட சொல்லித் தந்தான். இப்போ நான் அதுதான் விளையாடுறேன். எங்க வீட்ல பம்பரம் இருக்கு. உங்க வீட்ல இருக்கா? இருந்தா எடுத்துக் கொடு. நாம விளையாடலாம். நான் உனக்கு சொல்லித் தரேன்.” என்றாள் சத்யா. “பம்பரமா?!!” என்று வியப்பானாள் வினிஷா. “பம்பரம் தெரியாதா?!! அடுத்த சனிக்கிழமை வரும்போது நான் எடுத்துட்டு வரேன். பம்பரம் தான் தெரியாது.. கோலியாவது விளையாடத் தெரியுமா? என்கிட்ட ஒரு டப்பா நிறைய கோலிகுண்டு இருக்கு. உன்கிட்ட ஒன்னாவது இருக்கா?” என்றாள் சத்யா.
சத்யாவின் ஏளனப் பேச்சை வினிஷாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. குறுகிப் போனாள். வினிஷாவை பார்த்து, “உன் கிட்ட இல்லாதத சுட்டிக்காட்டுனா, உனக்கு கோபம் வருதுல்ல. அப்படித்தான் எனக்கும் இருக்கும். என்கிட்ட இல்லாதது உன்கிட்ட நிறைய இருக்கு. உன்கிட்ட இல்லாத சில விஷயம் என்கிட்ட இருக்கு. இல்லையேன்னு ஏளனம் செய்யாம ஷேர் பண்ணுனா, ரெண்டு பேருமே ஜாலியா விளையாடலாம்.. ஆனா, நீ ஒவ்வொரு தடவையும் என்னை ஏளனப்படுத்தி பொருளை கொடுப்ப. அப்போலாம், எனக்கு அந்த பொருளை தூக்கி போட்டு உடைக்கணும்னு தோணும். அவ்வளவு கோபம் வரும். ஆனா, நான் என்ன அப்படியா செஞ்சேன்! புரிஞ்சுக்கோ, வினிஷா! நீ ஷேர் பண்றேன்னு பேர்ல என்னை இன்சல்ட் பண்ணுற! நீ இனிமேலும் இப்படியே இருந்தா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, உன் வீட்டுக்கு இனிமேல் வர மாட்டேன்.” என்று சொல்லி முடித்தாள் சத்யா.
வினிஷாவுக்கு இப்போதுதான் அவள் செய்த தவறுகள் புரிந்தது. தன்னிடம் இருக்கும் பொருளை சத்யாவுக்கு கொடுப்பதில், தான் கர்வம் கொண்டிருந்ததை உணர்ந்தாள். பகிர்ந்து கொள்வது ரொம்ப நல்ல பழக்கம். ஆனால், அதைப்பற்றி கர்வமாக நினைப்பது மிகப்பெரிய தவறு என்பதை வினிஷா உணர்ந்து கொண்டாள். அழுதபடியே சத்யாவின் கைகளைப் பிடித்து, “சாரி, சத்யா! நீ சொன்னதுக்கு அப்புறம் தான், நான் தப்பு பண்றேன்னு எனக்கு புரிஞ்சது. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். நீ வீட்டுக்கு வராமல் போயிடாத! நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்!” என்று சொல்ல, சத்யா வினிஷாவை கட்டியணைத்துக் கொண்டாள். விளையாட்டுப் பொருட்களை பகிர்ந்து கொள்வது போல, சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் தோழிகளாக இருவரும் வளர்ந்தனர்.
முற்றும் .
PLEASE CHECK YOUR PHOTO
Sivagami V
ABOVE SHARED PHOTOGRAPH WILL BE USED IN THE CERTIFICATE AND DONT WORRY IF THE ALLIGNMENT IS NOT CORRECT. IT WILL BE CORRECTED DURING CERTIFICATE DESIGN.
ALSO THE NAME MENTIONED BELOW THE PHOTOGRAPH WILL BE WRITTEN ON CERTIFICATE.
bottom of page