top of page
ALL INDIA
ASPIRING WRITER's
AWARD
Harikumaran
REGISTRATION ID
B6088
YOUR FINAL SCORE IS IN BETWEEN
9.15 - 9.75
IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU.
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.
click on the below link to know more information about the FINAL ROUND
Written By
Harikumaran
கூட்டத்தில் கூத்தாடி
கதைச்சுருக்கம்;
கூத்துக் கலையை தொழிலாக கொண்ட ஒரு குடும்பம் கொரோனா ஊர் அடங்கினால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது அவர்களின் சூழ்நிலை காரணத்தால் எடுக்கப்படும் முடிவுகள் ஏற்படும் விளைவுகளை இக்கதை விவரிக்கின்றது..
(2020 ஆம் ஆண்டு ஊரடங்கு தளர்வு விட்டு சில நாட்கள்)
காஞ்சிபுரம் அத்துபட்டி கிராமம் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள குளத்தைச் சுற்றி மக்கள் நடமாட்டத்தினால் உருவான சாலையைச் சுற்றிலும் ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளுமாக காணப்படும் அந்த சாலையின் மையத்தில் சீமை ஓட்டினாள் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூறையில் சேவல் கொக்கரிக்க வீட்டின் வெளியே சிறார்கள் சத்தத்துடன் விளையாடிக் கொண்டிருக்க 19ஆம் அகவையை (வயது) கடந்து கொண்டிருக்கும். முத்து வீட்டின் வெளியே சிறிய திண்ணையின் மேல் லுங்கியுடன் குத்தான் காளிட்டு பல் துவக்கி கொண்டிருக்கின்றான் பின்னடைவில் முத்துவின் பாட்டி பாத்திரங்களை சலசலப்புடன் துலக்கி கொண்டே முத்துவை திட்டிக் கொண்டிருக்கின்றாள்
முத்துவின் பாட்டி (முனங்கல்)
“காலங் காத்தால எழுந்ததுல இருந்து இந்த வூட்டுக்கு பாடு எடுக்கவே சரியா இருக்கு சொல் புத்தியும் இல்ல சுய புத்தியும் இல்ல அங்கங்க புள்ளைங்கக கட்டிக்கின்னு வாண்ணா வெட்டிக்கின்னு வருதுங்க வெட்டிக்கின்னு வாண்ணா கட்டிக்கிட்டு வருதுங்க”
என முனங்கிய பாட்டி முத்துவை பார்த்து சத்தமாக
“வீட்டிலேயே உக்காந்துட்டு இரு பா. எல்லா தானா வந்துரும்”
என சத்தமாக சொல்ல. சற்று எரிச்சல் அடைந்த முத்து ப்ஷ்ஸ் என முகம் சுளித்துவிட்டு பின் திரும்பி வீட்டின் உள்ளே இருக்கும் பாட்டியை பார்த்து
“காலங்காத்தால ஏன் உயிரை வாங்குற”
என்று கூறிவிட்டு வாய் கொப்பளித்து பல் வலக்கிய பிரஷ்சை வாசலின் மேல்புறமாக ஓட்டில் சொருகி விட்டு உள்ளே வருகின்றான் கோபத்தில் முத்துவை பார்த்த பாட்டி
“காலங்காத்தாலயா வெளியே போய் சொல்றத
காரி மூஞ்சி மேல முழிய போறாங்க”
பாட்டி சொல்வதை கண்டும் காணாமல் முத்து சமையலறையில் சென்று பாத்திரங்களை திறந்து பார்க்கின்றான் ஒரு சில்வர் குண்டானில் பழுது உள்ளதை பார்த்து சட்டியுடன் அப்படியே கொண்டு வந்து ஹாலில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்க கோபம் குறையாத முத்துவின் பாட்டி
“வீட்ல ஒன்னோட ஒன்னு இல்லன்னு உடம்புல ஒரு பயம் இருக்கா உனக்கு. என முத்துவை பார்த்து கத்திக் கொண்டிருக்க”
முத்து அவனுக்கு நேர் எதிரே முளைகட்டிய பயிறுடன் தங்க மெடல் போடப்பட்ட கொரோனா நோயினால் இறந்த தன் அப்பாவின் போட்டோவை உற்று பார்க்கின்றான்
“முத்துவின் பாட்டி, இதோ வந்துடுச்சு.
இன்னும் நாலு நல்ல காரியம் வேற பண்ணனும்
கையில ஒரு ரூபாய் இல்ல”
மெடலை பார்த்துக் கொண்டிருந்த முத்து சட்டென்று
“யோவ் மெடல வித்தரவா”!
முத்து கூறியதைக் கேட்டு மிகுந்த கோபத்துடன் முத்துவின் பாட்டி
“பல்லும் வாயும் செல்லரிக்கனு எப்படி சொல்றான் பாருடி அவன்”…
என்று கூறிக் கொண்டே துலக்கிக் கொண்டிருந்த பாத்திரத்தில் ஒரு கரண்டியை எடுத்து முத்துவின் வாயில் இடிப்பது போல வந்த பாட்டி
“என் புள்ளைய பொதச்ச இடத்தில புல்லு பூண்டு கூட முளைச்சி இருக்காது அதுக்குள்ள அவன் ஞாபகத்த அழிக்க பாக்குறாண்டி”
என்று கூறிக் கொண்டே பாதி அழுகையுடன் முத்துவிடம்
“உன் அப்பன் கூத்து கட்டினத பாத்து எம்ஜிஆர்ரே மேடை ஏறி போட்ட மெடல் அதுக்கு அப்புறம் சுத்து ஏரியால எங்க கூத்து கட்டினாலும் உன் அப்பன தான் கூட்டிட்டு போவாங்க”
என்று கூறிவிட்டு முத்துவின் பாட்டி அழுது கொண்டே புலம்பியபடி
“இப்ப கூட என் புள்ள இருந்திருந்தா இந்த வயசானவள சோத்துக்கு கஷ்டப்படுற அளவுக்கு விட்டு இருக்க மாட்டான்”
என கூறிக்கொண்டே மூக்கை சிந்ததிவிட்டு
“பாவியும் நோய் என் புள்ளைய விட்டுட்டு. என்ன தூக்கிட்டு போய் இருக்கலாமே”
என்று பாட்டி புலம்பிக் கொண்டிருக்க. வெளியே இருந்து முத்து முத்து என குரல் கேட்க முத்து சாப்பிட்ட கை கழுவாமல் வெளியே வந்து பார்க்கின்றான்.
49 வயது உடைய முத்து அப்பாவின் நண்பரான பன்னீர் மேல் சட்டையில்லாமல் சுருக்கத்துடன் பழைய வெள்ளை வேட்டியுடன் கரை வைத்த துண்டை மேலே போட்டவாறு
“அப்பாது ஆஞ்சநேயர் வேஷம் கட்டுற செட்டு ஒன்னு குடேன். ஒரு பொழுது சென்னு தரேன் என்று முத்துவை பார்த்து கேட்கின்றார்”
பன்னீரை பார்த்த முத்து “வா மாமா உட்காரு”.
பன்னீர் திண்ணையின் மேல் அமர்ந்தபடி.
“அது என் துணிய அத்த கசக்கி போட்டுட்டா. அதான் உன்ட்ட கேக்குற”.
“பெட்டில தான் இருக்கு மாமா எடுத்துனு வரேன் இரு”
கை கழுவி விட்டு அப்பாவின் கூத்துப்பெட்டியை திறக்கின்றான் முத்து
அதில் அப்பா கூத்து கட்ட உபயோகப்படுத்தும் அனைத்து வகையான துணிகளும் இருக்கின்றது. பெட்டியின் அருகில் ஆஞ்சநேயர் ஜடாயுதம் மற்றும் ராமர் வில் கிரீடம் என கூத்து கட்ட தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களும் இருக்கின்றன
ஓரிரு துணியை எடுத்ததும் முத்துவின் அப்பா எம் ஜி ஆர் இடம் மெடல் வாங்கிய பழைய (black and white) போட்டோ இருப்பதை பார்க்கின்றான். அப்பாவுடன் அவனுடைய ஞாபகங்கள் அவன் சிந்தனையை தூண்டுகின்றது.
ஆஞ்சநேயர் துணியை எடுத்த முத்து வெளியே திண்ணையில் இருக்கும் பன்னீரிடம் கொடுத்துவிட்டு
“நானே உன்ன பாக்க வரலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்த மாமா”!
துணியை வாங்கிய பன்னீர் அளவுகளை பார்த்துக் கொண்டே சந்தேகத்துடன்?
“இன்னா எதுக்கு”
என்று பன்னீர் கேட்க முத்து மிகுந்த தயக்கத்துடன் முன்பின் யாரிடமும் கடன் கேட்காத நிலையில் தன் அப்பாவின் காரியத்திற்காக
“மாமா ஒரு 5000 ரூபாய் கடனா குடுத்தா நல்லா இருக்கும் வேலைக்கு போனதும் திருப்பி கொடுத்துட்றேன்”
பன்னீர் தயக்கத்துடன் இழுத்துக்கொண்டே
“இல்ல முத்து.. ஏற்கனவே உங்க ஆயா ஒரு 1000 ரூபா தரணும்”
முத்து மிகுந்த மனவேதனையுடன்
“என்ன பண்றது மாமா.. அப்பா இல்ல.. உனக்கே தெரியும் பழைய மாதிரி எங்கேயும் கூத்து கட்ட விட மாட்றாங்க”.
எங்க போய் வேலை கேட்டாலும் இப்பதான் ஊரடங்கு முடிஞ்சி வேலைய ஆரம்பிச்சிருக்கேன் அடுத்த மாசம் பாக்கலாம்னு சொல்றாங்க வீட்ல ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா. பத்தாததுக்கு காரியம் வேற பண்ணனும் அப்பாகு
இதைக் கேட்ட பன்னீர்
“இன்னா முத்து யார்கிட்டயோ சொல்ற மாதிரி சொல்லுற. நானும் உன் அப்பனும் வேசம் கட்டி மேல ஏறுனா
எந்த அளவு கைத்தட்டி விசில் அடிப்பாங்களோ அந்த அளவுக்கு நமக்கு பிரச்சனைனா ஒதுக்கி விட்டுடுறாங்க”
ஏதோ இந்த ஒரு வாரமா கையில 100ரோ 200ரோ பாக்குறேன் நாஷ்டா சாப்பிடுறோம்
முத்து மீண்டும்
“சரி ஒரு 500 ரூபாய்யாச்சும் இருக்குமா பாரு
டிரஸ்ஸ கூட நீயே எடுத்துக்கோ”
என்றதும் பன்னீர் அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து பணத்தை பிரித்து எடுக்க பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டுக்களாக உள்ளது
அப்பொழுது முத்து சந்தேகத்துடன்
“ஆமா இப்ப தான் கூத்து கட்ட விடமாற்றங்களே ஆஞ்சநேயர் துணி எதுக்கு உனக்கு”?
பணத்தை எண்ணி முடித்த பன்னீர்
“இப்ப இந்த துணி என்ன விட உனக்கு தான் முக்கியமா தேவ படுது இன்னொரு செட்டு இருக்கா”?
“இருக்கும் மாமா சரி எதுக்குன்னு சொல்லவே மாற்றியே என்று முத்து கேட்க”
பன்னீர் முத்துவின் முகத்தை பார்த்துப்விட்டு.
“இதோ பாரு முத்து நம்ம கிட்ட என்ன இருக்கோ அத வச்சு தான் நம்ம சூதானமா பொழச்சிக்கணும்.
நான் சொல்ற மாதிரி கேட்டினா ஒரு நாளைக்கு 300ரூபா லிருந்து 600 வரையிலும் கையில காசு வரும்”
என்று பன்னீர் சொல்ல முத்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்க. பன்னீர் முத்துவிடம்
“கலர் ராமர் செட்டு எல்லாம் எடுத்துகிட்டு பால்மாறாத பஸ் ஏறி பஜார் இல்ல புது பஸ் ஸ்டாண்ட்க்கா போயிடு.
ஏதாவது கோவிலா பார்த்து ஒக்காந்து வேஷம் போட்டுக்குனு ராமர் பாட்டு பாடிக்கின்னே ரோட் ரோடா வீடு வீடா நடக்க ஆரம்பி
அஞ்சோ பத்து கையில இருக்கிறது கொடுப்பாங்க இத வச்சு தான் இப்போதைக்கு என் பொழப்பு ஓடிட்டு இருக்கு”
இதை கேட்ட முத்து சற்று எதிர்பார்ப்பை இழந்தவனாக பன்னீரை பார்க்கின்றான்
பன்னீர் அவர் வேஷ்டியில் இருந்து எடுத்த பணத்தை முத்துவிடம் கொடுக்க முத்து பணத்தைப் பார்த்துவிட்டு பன்னீரின் முகத்தை பார்க்க அப்போது பன்னீர்
“என்ன பார்க்கிற இதுதான் உண்மை இப்ப கூத்தாடிங்களுக்கு இதுதான் நிலைமை”
என்று கூறிக் கொண்டே மன வருத்தத்துடன் திரும்பி போகும் பொழுது
“உன் அப்பன் இருந்திருந்தாலும் இப்ப இத தான் பண்ணி இருப்பான்”.
என்று கூறிக்கொண்டே செல்கின்றார் முத்து திரும்பி உள்ளே சென்று பெட்டியை மூட அதில் ஆஞ்சநேயர் துணி உள்ளதை பார்க்கின்றான் பின்னடைவில் முத்துவின் பாட்டி புலம்பிக் கொண்டிருக்க பாட்டியை பார்த்துவிட்டு மீண்டும் துணியை பார்க்கிறான் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக ஒருமுறை முயற்சிக்க முடிவு எடுக்கும் முத்து
மறுநாள் காலை காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் அனுமன் கோவில் வளாகத்தின் மதில்சுவர் ஒட்டியவாறு குளக்கரையில் ராமர் பாடல் புத்தகத்தை பார்த்தபடி பாடிக்கொண்டே முத்து முகத்தில் வர்ணங்களை தீட்டி அனுமன் வேடம் அணிந்து கொண்டிருக்கின்றான்..
வேடம் அணிந்து முடிந்தவுடன் ஒரு கையில் தாளமும் மற்றொரு கையில் புத்தகமும் இடுப்பின் சுருக்குப் பையில் குங்குமம் வைத்துக்கொண்டு ராமர் பாடலை சத்தமாக பாடிக்கொண்டே வீதியில் நடக்க துவங்குகிறான் எதிரில் நடந்துவரும் மனிதர்களிடம் ராமர் பாடலை பாட அவர்கள் முத்துவிடம் ஐந்து ரூபாயை கொடுக்க அதை வாங்கிக் கொண்டு வணக்கம் வைப்பது போல செய்துவிட்டு அவர்களை கடக்கின்றான்
வீடு வீடாகச் சென்று வாசலில் ராமர் பாடல் பாட ஒருசிலர் வீட்டில் தங்களால் முடிந்த சில்லறைகளை தருகின்றனர் ஒருசிலர் தர மறுக்கின்றனர் இவ்வாறு ஆண்கள் தாய்மார்கள் என பல்வேறு மனிதர்களையும் சந்திக நேர்கின்றது இதனிடையில் மதிய உணவிற்காக வலிமிகுந்த கால்களுடன் தெருவோர டீக்கடையின் வெளியே குத்தாம் கால் போட்டவாறு தன் கால்களை அழுத்திக்கொண்டே டீயும் பண்ணும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே பையிலிருக்கும் பணத்தை எண்ணிக் கொண்டு இருக்கின்றான்…
அப்பொழுது தூரத்தில் இரண்டு திருநங்கைகள் எதிரில் வரும் ஒரு மனிதனை மரித்து கைதட்டி பணம் கேட்கின்றனர் அம்மனிதன் ஐந்து ரூபாய் எடுத்து நீட்ட அதை ஒரு திருநங்கை வாங்கி வாயில் கடித்து மீண்டும் அம்மனிதன் இடமே கொடுத்துவிட்டு
“இத செலவு பண்ணாம நீயே வச்சுக்கோ… எனக்கு 20 ரூபா குடு”..
என்று கேட்க அம்மனிதன் வேறு வழியின்றி இருபது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்க அம்மனிதனின் தலைமீது கைவைத்து வாழ்த்திவிட்டு திருநங்கைகள் முத்துவை பார்த்தவாறு நடந்து வருகின்றனர் இதை கவனித்த முத்து அவன் கையில் எண்ணிக்கொண்டிருந்த பணத்தை விருவிருவென மீண்டும் பையிலேயே வைக்கின்றான் முத்துவை நெருங்கிய திருநங்கைகள்
“சாமி எங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க”
என்றதும் கடவுள் வேடம் அணிந்து இருக்கின்றோம் என்பதை நினைவு கூர்ந்தான்
முத்து குத்தகாலிட்டு அமர்ந்தபடியே பையில் இருக்கும் குங்குமத்தை எடுத்து திருநங்கையின் கையில் வைத்துவிட்டு அவனுடைய கையை எடுத்து திருநங்கையின் தலைமீது வைத்து ஆசீர்வாதம் செய்வது போல் வைக்கின்றான்.
பின் திருநங்கைகள் ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து முத்துவிற்கு கொடுக்கின்றனர் முத்து பணத்தை வாங்கிக்கொண்டு திருநங்கைகளை ஆச்சரியத்துடன் பார்க்கின்றான் அருகில் இருக்கும் டீக்கடைக்கு செல்லும் திருநங்கைகள் டீ போட்டுக்கொண்டிருக்கும் இளைஞனை
“இந்த ஆம்பள பையன பாரேன் டி எப்படி இருக்கான்”..
என்று கூறி கிண்டல் செய்து
ரெண்டு கப் ஹார்லிக்ஸ் பார்சல் பண்ணு
தெருவோரக்கடையின் ஓரமாக முத்து திருநங்கைகளை பார்த்தவாறு டீயையும் பண்ணையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான்
டீயை வாங்கிய திருநங்கைகள் தெருவோர டீக்கடையின் அருகில் இருக்கும் சந்தின் வழியாக தன் வீட்டிற்கு செல்கின்றனர்..
அச்சந்தில் மூன்று இளைஞர்கள் பார்ப்பதற்கு பணக்காரர்கள் போலவும் காலேஜ் படித்து கொண்டிருக்கும் வயது உடையவர்களாகவும் இருக்கின்றனர் திருநங்கைகளை பார்த்தவர்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு அதில் ஒருவன் மட்டும் திருநங்கையிடம் பேச வருகின்றான்.
இது அனைத்தும் முத்து தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றான் அவர்களுக்குள் ஏதோ பேசியவாறு சிறு சலசலப்புடன் திருநங்கைகள் அவர்களை கடந்து செல்ல
அவர்கள் பின்னடைவில் இருந்து ஒரு இளைஞன் கையில் ஏதோ மறைத்தவாறு நின்று கொண்டிருக்கும் இளைஞர்களிடம் வருகின்றான்
இளைஞன் 2 “என்னடா ஆச்சு”
இளைஞன் 1 “ஒன்னு இல்ல நீ வாங்கிட்டியா”
இளைஞன் 2 “வாங்கிட்டேன்”
என்று கஞ்சா பொட்டலத்தை காட்டுகின்றான் உடன் இருந்தவன் உடனே மறைத்து அங்கிருந்து செல்கின்றனர்.
டீக்கடையில் பணத்தை எண்ணி முடித்த முத்து அன்று முத்துவின் வருமானம் 400 ரூபாயாக இருந்தது வேறு வேலை கிடைக்கும் வரை இதே போல் செய்யலாம் என முடிவெடுத்த முத்து.
மறுநாள் மீண்டும் கோவில் முன் வேடம் அணிந்து கொண்டு வீதிவீதியாக ராமர் பாடல் பாடிக்கொண்டே செல்ல ஒரு தேருவில் நாய்கள் துரத்துகின்றன ஓட்டம் எடுக்கின்றான் பின்னே இருக்கும் வால் அவிழ்ந்து விழுகின்றது மீண்டும் அதை எடுத்து ஓடுகின்றான்..
வீடு வீடாகச் சென்று ராமர் பாடல் பாடுகின்றான் ஒரு சிலர் வீட்டில் பணம் கொடுக்கின்றனர் ஒரு சிலர் கொடுக்க மறுக்கின்றனர்..
Flats அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் ரோட்டில் முத்து நடந்து வர அங்கே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் ஆஞ்சநேயர் வேடத்தில் முத்துவை பார்த்தவர்கள் முத்துவை போனில் விடியோ எடுக்கின்றார்கள். அவர்களைக் கடந்து முத்து நடந்து வர பின்னடைவிலிருந்து ஒரு மனிதர் முத்துவை பார்த்து
“ஏ. ஏய். நில்ரா”
என கத்திக் கொண்டே ஓடி வர முத்துவிற்கு கேட்காமல் முத்து நடந்து சென்று கொண்டிருக்கின்றான் பின்னடையிலிருந்து ஓடி வந்தவர் முத்துவின் மேல் சட்டையை இறுக்க பிடித்து
“நின்றனா நிக்க மாட்டியா”
என மிரட்ட பின்னடைவில் குழந்தைகளிடமிருந்து மற்றொரு மனிதர்
“போன் இங்க தான் இருக்கு”
என்று கூறிக் கொண்டே போனை கையல் தூக்கி காட்டுகின்றார் முத்துவின் சட்டையை பிடித்த நபர் sorry sorry எனக் கூறிவிட்டு செல்கின்றார்
மதிய வேளையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் முத்து மீண்டும் திருநங்கைகளை சந்திக்கின்றான் திருநங்கைகள் அவர்களுக்குள் பேசிக் கொண்டு வருகின்றனர் இரண்டு திருநங்கைகளில் ஒருவர் இளம் வயதினர் அவர் கையில் ஹியூமன் பீயிங் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கின்றாள்
அப்பொழுது இளம் வயது திருநங்கை
“அது எப்படி அக்கா ஆம்பளைங்கள்ள ஐட்டம் இருக்காங்க
பொம்பளைங்கள்ள ஐட்டம் இருக்காங்க
திருநங்கைகளையும் ஐட்டம் இருக்காங்க ஆனா
திருநங்கை நு வரும்போது மட்டும் எல்லாரையும் ஐட்டமா பாக்குறது தான் தப்பா இருக்கு.
இன்னைக்கு 60 வயசு கிழவன் எல்லார் முன்னாடியும் பட்டப்பகல்ல தைரியமா வந்து எவ்வளவு வரியா நு கேட்கிறான்”
உடன் நடந்து வரும் மூத்த திருநங்கை
“விட்றி அதையே நினைச்சுட்டு. இப்படித்தான் நம்ம பிறப்புனு ஆயிடுச்சு சகிச்சுக்கிட்டு தான் வாழனும்”
பேசிக்கொண்டே முத்துவின் அருகில் வர
மூத்த திருநங்கை
“எங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி”
முத்துவிடம் ரூ.40/10 நோட்டை கொடுத்துவிட்டு டீக்கடைக்குள் செல்கின்றாள் உடன் வந்த இளம் திருநங்கை முத்துவிடம்
“எங்க போனாலும் எங்களை தப்பா தான் சாமி நினைக்கிறாங்க
*எங்க மேல பட்ட கரைய.. எவ்வளவு கழுவனாலும் போகவே மாட்டேங்குது சாமி*”
திருநங்கை சொல்வதை கவனித்தும் கவனிக்காமல் தலையை ஆட்டியவாறு முத்து கொடுத்த பணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்
இளம் திருநங்கை டீக்கடையில் இருக்கும் மற்றொரு திருநங்கையிடம்
“அக்கா நான் போறன் வா”
எனக் கூறிவிட்டு சந்தின் வழியே வீட்டிற்கு செல்கின்றாள்
டீ கடைகார் மூத்த திருநங்கை இடம்
“என்ன மா திருவிழாக்கு எப்படியோ போலீஸ் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டீங்க நாளைக்கு காளி வேசம் பொடுறியா?”
மூத்த திருநங்கை
“எங்க அண்ணா நேத்து இருக்க உடம்பு இன்னிக்கு இல்ல கால் கைலாம் ரொம்ப வலிக்குது பாக்கலாம்”
அப்பொழுது அங்கு இருந்த இளைஞன் அவனுடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் இளம் வயது திருநங்கை வருவதை பார்த்து அதில் ஒருவன் வழிமறித்து பேசுகின்றான்
இளைஞன்
“ஹே, ஹாய் ஒரு நிமிஷம் எனக்கு தெரியும் உனக்கு interest இருக்குன்னு அதனாலதானே last time சண்டை போடாம பேசாம போயிட்ட.
என்ன சொல்ற போல ஆனா போயிடலாம். ம்ம் என்ன சொல்ற (கொஞ்சிய படி)
என்கிட்ட சொந்தமாக கார் இருக்கு எங்கேயாவது தூரமா போயிடலாம் நம்ம மூணு பேரு மட்டும் தான்”
என்று கூறிக் கொண்டே இளம் வயது திருநங்கையின் அருகில் வர
“நான் அந்த மாதிரி ஆள் இல்ல ஒழுங்கா வழி விடு”
“Transgender தர satisfaction வேற யாரும் தர முடியாதுன்னு மற்றொரு இளைஞரை கைகாட்டி இவன் தான் சொன்னான்
“என்ன சொல்ற. போல ஆனா போயிடலாம். என்ன சொல்ற. ம்ம்”
என்று திருநங்கையின் கையைப் பிடிக்க அவள்
“அக்கா அக்கா”
என கத்துகின்றாள் அதைக் கேட்ட மற்றொரு திருநங்கை டீக்கடையில் இருந்து பதறி அடித்து ஓடி வர திருநங்கை கையில் இருந்த காசு பை கீழே விழுகின்றது அதை பார்த்த முத்து பையில் இருந்து சிதைந்த பணத்தை எடுத்து பையிலே வைத்துக்கொண்டு இருக்கின்றான்
ஓடி வந்த மூத்த திருநங்கை. கையைப் பிடித்தவனை கன்னத்தில் ஓங்கி அடித்து
“ஒத்த கையை விடுடா மூஞ்ச பாத்தியா அதுக்கு கடா மூஞ்சி கையிலேயே பிடிச்சுக்குன்னு சுத்துவீங்களா
இந்தா வா..பாரு வா”..
என தன் சேலையை முட்டி கால் அளவுக்கு தூக்குகின்றாள்.. உடனிருந்த இளைஞரின் நண்பன்
“அக்கா விடுங்க கா
அக்கா தெரியாம பண்ணிட்டா அக்கா..
ரோட்ல எல்லாரும் பாக்குறாங்க விடுங்கா”
மூத்த திருநங்கை
“எல்லாரையும் ஒரே மாதிரி பாக்காத நாங்க அத மாதிரி ஆள் இல்ல”.
திருநங்கைகளின் பையில் இருந்த பணத்தைப் எடுத்து வைத்த முத்து திருநங்கையிடமே கொடுக்க செல்கின்றான் அப்பொழுது அங்கிருந்த இளைஞர்களை பார்க்கின்றான் ஒருவன் மட்டும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு திருநங்கை முறைத்தபடி சுற்றி முற்றிலும் பார்க்கின்றான்
காசு பையை திருநங்கை இடம் கொடுத்த முத்து பையையே பார்த்தபடி முத்துவின் சிந்தனை
“ஒரே மாதிரியான வேலையை தான் செய்கிறோம் கடவுள் வேஷமே போட்டாலும் கொடுக்கிறது தான் வாங்க முடியும். திருநங்கை வேஷம் போட்ட தீர்மானமா கேட்டு வாங்கிக்கலாம் இதை ஆழ்ந்த சிந்தனையுடன் யோசித்த முத்து பணத்தின் மேல் மிகுந்த ஆசை வருகின்றது மறுநாள் ஊர் திருவிழாவில் திருநங்கை வேடம் அணிந்து அவர்களைப் போல பணம் வாங்க முயற்சிக்கின்றான்”
மறுநாள் திருநங்கை வேடம் இட்ட முத்து மயான கொள்ளை நடந்து கொண்டிருக்கும் ரோட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க அனைவரிடமும் திருநங்கை போல் கைதட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கின்றான்
ஒரு சிலர் முத்துவை இடுப்பில் கிள்ளுகின்றனர்
ஒரு சிலர் முத்துவிடம் “எவ்வளவு வரியா”?
என கேட்கின்றனர் சற்று சலித்த முகத்துடன் முத்து கடந்து செல்கின்றான்
மக்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கின்றான் தெருவோரக்கடைகளிலும் வாங்குகின்றான் பின் மதிய நேரமானதும் தெருவோர டீக்கடையில்.
டீ குடித்துக் கொண்டே பையில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்கின்றான் எப்பொழுதும் 300 ரூபாய் 600 ரூபாய் மட்டும் வைத்திருந்த பையில் இன்று 1500 ரூபாய் மேல் இருந்ததை பார்த்து மிகவும் சந்தோஷமாக டீ குடித்துக் கொண்டே தெருவில் நடந்து செல்லும் பெண்களின் கால்நடையை உன்னிப்பாக கவனிக்கின்றான் டீக்கடைக்காரரிடம் காசு கொடுத்து விட்டு இவனும் பெண்களை போல் இடுப்பை சற்று வளைத்து நெளித்து நடக்க ஆரம்பிக்க
அதே சமயத்தில் காளி ஊர்வலம் ஆரம்பிக்கின்றன ஒரு காலி இவனை கடந்து செல்ல மக்கள் அனைவரும் காளியை பார்த்துக் கொண்டிருக்க சற்றென ஒரு கை அவன் இடுப்பிலும் ஒரு கை அவன் வாயையும் மூட அருகாமையில் இருக்கும் முட்டு சந்தில் முத்துவை இழுத்து கை கால் கட்டப்படுகின்றான்
அவர்கள் அதே ஏரியாவில் திருநங்கைகளிடம் சண்டையிட்டு கன்னத்தில் அடி வாங்கிய இளம் வயதுடையவர்கள் போதை மயக்கத்தில் உள்ளனர் வாய் கை கட்டப்பட்டு முட்டி போட்டவாறு முத்து இவர்களைப் பார்த்ததும் முத்துவிற்கு ஒன்றும் புரியாமல் சுற்றி முற்றிலும் அவர்களைப் பதட்டத்துடன் பார்க்கின்றான்
ஒரு இளைஞன், 1 “மச்சான் இது அது இல்லடா”
இளைஞன், 2 “எப்படிடா மிஸ் ஆச்சு என்னடா சொதப்புரோம் எனக்கு வேற Bad tripp ஆகுது”
அச்சமயம் சாலையில் காளிகள் ஆடிக்கொண்டே ஆக்ரோஷமாக ஒன் பின் ஒண்ணாக சென்று கொண்டிருக்கின்றன
உடன் இருந்த மற்றொருவன் இவர்கள் இருவரையும் பார்த்தவாறு
இளைஞன், 3 “ஹே இப்ப next என்னன்னு தான் மச்சி பார்க்கணும்”
என்று கூறிவிட்டு முத்துவை உண்மையான திருநங்கை என நினைத்துக் கொண்டு முகத்தில் குத்துகின்றான் மூவரும் முத்துவை போட்டு அடிக்கின்றனர்
அதே சமயம் முத்துவின் பின்னடைவில் உள்ள ரோட்டில் காளி ஒரு வேட்டைக்கு தயாராவதை போல காளியின் எதிரில் கோழி இருப்பது கோழியை கடிக்க காளி ஆவேசத்துடன் ஓடி வருகின்றது
முட்டி போடப்பட்டு வாய் கட்டப்பட்டுள்ள முத்துவின் முகம் முழுவதும் ரத்தமாக வழிந்து கொண்டிருக்க
மூன்று இளைஞர்களின் ஒருவன் பேண்டின் zib அவிழ்த்தவாறு முத்துவின் அருகில் வர மற்றொரு இளைஞன் முத்துவின் வாயில் கட்டப்பட்டிருக்கும் துணியை பின்னடைவிலிருந்து அவிழ்க்க
முத்து தான் திருநங்கை இல்ல பணத்திற்காக இதுபோல வேஷம் போட்டிருக்கேன் என்பதை சொல்வதற்குள்
“வார்த்தை திணிக்கப்படுகிறது”
கடைசி முயற்சியாக முத்து எதிர்த்து அவனது ஆண்குறியை கடித்துவிட்டு சந்தில் இருந்து வெளியே தப்பி ஓடி வருகின்றான்.
அதே சமயம் வெளியே ஆக்ரோசத்தின் உச்சகட்டமாக காளி கோழியின் தொண்டையை கடிக்க கோழியின் ரத்தம் காளியின் முகத்தில் அடிக்கின்றது பின் தலை பாதி உடம்புக்கு பாதியாக கோழி கீழே விழுகின்றது
முத்து வாய் முழுதும் ரத்தத்துடன் தலையில் இருந்த தோப்பா முடி பாதி ஒட்டியபடி வாய் மற்றும் மார்பகத்தின் மேல் ரத்தத்துடன் அழுது கொண்டே கூட்டத்தின் நடுவே பிளந்து கொண்டு ஓடி வெளியே வருகின்றான் சுற்றிலும் கூட்டம் இருப்பதை பார்க்கின்றான்.
*அப்பொழுது எதிரே ராமர் வேஷம் போட்டுக் கொண்டு ஒருவர் வருகின்றார் அவரை பார்த்த படியே சற்று அழையைய் அடக்கியபடி*
விறுவிறுவென கோவில் குளத்திற்கு சென்று படியில் அமர்ந்து அழுதப்படியே படியில் சாய்ந்து படுகின்றான்.
குளத்தில் உள்ள நீர் அவனது முகத்தில் அலைபாய
அப்பொழுது அவனுக்கு திருநங்கை கூறியது சட்டென்று ஞாபகம் வருகின்றது…
“(எங்க போனாலும் எங்களை தப்பா தான் சாமி நினைக்கிறாங்க எங்க மேல பட்ட கரைய..எவ்வளவு கழுவனாலும் போகவே மாட்டேங்குது சாமி)”
அவன் வாயிலிருந்த ரத்தமும் அவனுடைய மேக்கப்பும் தண்ணீரில் கரைகின்றது.
END.
About the WRITER
Harikumaran
ABOVE PHOTOGRAPH WILL BE USED FOR
THE PARTICIPATION CERTIFICATE.
bottom of page