top of page
Image by Ambitious Studio* | Rick Barrett

ALL INDIA

ASPIRING WRITER's

AWARD

Kennedy antony

REGISTRATION ID

B5322

YOUR FINAL SCORE IS IN BETWEEN

9.15 - 9.75

IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.

1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE  WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU. 
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.

click on the below link to know more information about the FINAL ROUND



 

Written By

Kennedy antony

ஒரு நகரின் முக்கியமான பகுதியில் உள்ள Restaurant-ன் சிறிய Function Hall-ன் மேடைப்பகுதியில், பல பத்திரிக்கைகளின் Mic க்குகள்,table ன் மீது வைக்கப்பட்ருக்கின்றன. ஒரே ஒரு Chair மட்டும் போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் Chair களில் பத்திரிகையாளர்கள் ஆங்காங்கே இடைவெளி விட்டு உட்ட்கார்ந்திருக்கின்றனர். அப்போது புதிதாக வரும் பத்திரிகையாளர் தன்னுடைய Channel Mic-யை மேடையில் Set செய்து விட்டு பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து , தன் பக்கத்தில் இருப்பவரிடம் "எதுக்கு கூப்பிட்டாங்கனு சொன்னாங்களா " என்று கேட்க, "தெரியல ,TRP யை எகிற வைக்குற News ஆ இருக்கும்னாங்க ,நம்மளுக்கு தேவை அதான BOSS " என்று சொல்லும்போது, இன்பா, மேடையில் உள்ள Chair யை நோக்கி நடந்து வருகிறாள்.
இன்பாவைப் பார்த்ததும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். லேசாக சலசலப்பு ஏற்படுகிறது .
"BOSS இது அந்தப் பொண்ணுதானே" என்று TRP ஆளு கேட்க,"எந்தப்பொண்ணு" என்று பக்கத்தில் இருப்பவர் சொல்ல,"அந்தப் பொண்ணு மாதிரிதான் இருக்கு" என்று அவருக்குள்ளே சொலலிக்கொள்கிறார்.

இன்பா, எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதை பார்த்துக்கொண்டே Mic முன்னாடி வந்து உட்கருகிறாள் .

கூட்டத்தை நேரே பார்த்து பேச ஆரம்பிக்கிறாள்.

"முதல்ல என்னோட அழைப்ப ஏத்துக்கிட்டு வந்த உங்க எல்லோருக்கும் நன்றிய சொல்லிக்கிறேன். நீங்க எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் தான் ஆரம்பிக்கனும்னு நெனச்சேன் , அதனாலதான் இந்த தாமதம், அதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்.

ok , எதுக்காக உங்கள கூப்பிடருக்கேனா , நான் உள்ள வந்ததும் என்ன பார்த்த உடனேயே " அந்தப் Video ல இருக்குற பொண்ணுதானே இது " அப்டிங்குற குழப்பம் உங்களுக்கு இருந்ததுல, குழப்பமே வேண்டாம் இப்போ trending-ல இருக்குற அந்த Blur ஆனா Nude Video-ல இருக்குறது நான் தான் " என்று சொன்னதும் ,

எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர் .

“நான் பிறந்து வளர்ந்தது, கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு town. தேவைகள நிறைவேத்துற வசதியுள்ள குடும்பம் என்னோடது . பள்ளி விட்டா வீடு , வீடு விட்டா பள்ளி அப்படினு என்னோட பள்ளி படிப்பு முடிஞ்சுது . கல்லூரி போனதும் அங்க பாத்த சின்ன விசயம் கூட எனக்கு பெரிய மிரட்சியா இருந்துச்சு.அந்த மிரட்சியின் விளைவு காதல் . அவன் செய்த சிறு விசயங்கள் கூட அவன் மேல் எனக்கு ஈர்ப்பு வந்துச்சு. முழு மனசோட அவன காதல் பண்ணுனேன்.ஒரு நாள் ரெண்டு பேரும் வெளியில போன இடத்துல மழை பெஞ்சது, ஒரு இடத்தில் ஒதுங்குனோம், ரெண்டு பேரோட சம்மதத்தோட இணைஞ்சோம். அதுக்கு அப்புறம் ரொம்ப நாளா அவன் கிட்ட இருந்து எந்த தகவலும் இல்ல. மெல்ல மெல்ல அதில இருந்து மீண்டு வந்து கல்லூரிப் படிப்பை முடிச்சேன்.

சமீபத்தில தான் ஒருத்தரோட எனக்கு நிச்சயம் ஆச்சு. அவர்கிட்ட நான் நடந்த விசயம் எல்லாத்தையும் சொல்லிட்டேன். முற்போக்கு சிந்தனையுள்ள அவர் இதை பெரிதுபடுத்தல .இந்த நிலையில நேத்து எனக்கு அவன்கிட்ட இருந்து ஒரு Message வந்துச்சு. அதில “தனக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டதாகவும் ,அதற்க்கு முன் என்னோடு ஒரு நாள் இருக்க ஆசைப்படுவதாகவும் , இணங்க மறுத்தால் அவனோடு நான் இருந்த வீடியோ பதிவை வெளியிட்டு விடுவதாகவும்” சொல்லி ஒரு video link யையும் அனுப்புனான். ஒரு நிமிடம் நான் மிரண்டு போய்ட்டேன், அப்புறம் யோசிச்சேன்.
நான் அவன உண்மையா நேசிச்சேன் ,ஆனா அதுக்கு அவன் தகுதியான ஆள் இல்ல,இதுக்காக நான் வருத்தப்படல , அவன் மேல எந்த நடவடிக்கையும் எடுக்க போறதும் இல்ல” என்று சொல்லும் போது

"அப்போ எதுக்குமா எங்கள வர சொன்னே " என்று TRP ஆளு கேட்க ,

"கொஞ்சம் Wait பண்ணுங்க உங்க TRP க்கு News இருக்கு, சொல்றேன் " என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பிக்கிறாள் ,

உங்களுக்கு ஒன்னு தெரியுமா ஆதிவாசிகளெல்லாம் உடை அணிஞ்சதே இல்ல,ஆனா அவங்க கூட்டத்துல கற்பழிப்புங்குற விஷயமே கிடையாது.இங்க நம்ம எல்லாரும் துணிய வச்சு உடல மூடியிருக்கோம்,ஆனா நம்ம எல்லாரும் நம்புற இந்த நாகரிக வளர்ச்சிக்கு அப்புறம்தான் பொறந்த கொழந்தைல இருந்து வயசான ஆளு வரைக்கும் இங்க இன்னமும் பாலியல் வன்புணர்வு நடந்துட்டு இருக்கு .

"ஏமா, இப்போ என்னதான் சொல்ல வர்ற" என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க ,

பொண்ணுங்க எல்லாருக்கும் என்னோட ஒரே Request, வெறும் சதய படம் பிடிச்சு அத வச்சு உங்கள பணிய வைக்கனுன்னு நெனைக்கிறவங்கள பார்த்து பயப்படாதீங்க. முதல்ல உங்க வீட்ல சொல்லுங்க, மானம் போய்டும் ,தலைகுனிவாய்டும்னு நெனைக்காதிங்க ,தலகுனிய வேண்டியது நீங்க இல்ல , அந்த video வை எடுத்தவனோட பெத்தவங்களும் ,அப்புறம் அத like பண்ணி share பண்ணுனவங்களோட பெத்தவங்களும் தான்” என்று அவள் சொல்ல

"இதோ பாருங்க ,நீங்க ஒழுங்கா உங்க வீட்ல சொல்றத கேட்ருந்தா இந்த பிரச்சனையே இல்ல.இதே மாதிரிதான் சில பொண்ணுங்க disco ,pubனு போக வேண்டியது , அப்புறம் பிரச்சனைன்னு Media-வுக்கு வர வேண்டியது "என்று கேட்க

ஏன் Sir பொண்ணுங்க Disco ,Pub னு போகக் கூடாதா , பசங்க மட்டும்தான் போகணுமா . நம்ம Culture னு நம்ம நம்புற விசயம் சொல்றது இங்க போகணும் ,இங்க போகக் கூடாதுனு இல்ல , எங்க போனாலும் எப்படி இருக்கணும்னுதான். Cigarette, drink, late night party not only injurious to girls also boys " என்று அவள் சொல்ல

"சரிம்மா, இதுக்கு என்னதான் தீர்வுனு நீ சொல்ல வர்ற" என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க

இப்போ நான் சொல்லப் போறது இதுக்கு தீர்வா இருக்கும்னு எனக்குத் தெரியல , ஆனா என்னோட மனக் குழப்பத்துக்கான விடுதலையா இது இருக்கும்னு நான் நம்புறேன்.

நான் பொறந்ததும் பெண் குழந்தைக்குறதுனால அறைஞான் கையிரோட மணியையும் அம்மா சேர்த்து கட்டுனாங்க , கொஞ்சம் வளந்ததும் மாராப்பு போட்டாங்க , வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் வீட்ட விட்டு வெளிய போறப்பெல்லாம் Inners-அ Adjust பண்ணிதான் அனுப்புவாங்க ,அப்படி இருக்குற family-ல இருந்து வந்த பொண்ணுதான் நான். ஆனா அந்த விசயம்தான் இங்க எல்லாப் பொண்ணுங்களோட பயமாவும் மாறிருக்குனு நெனைக்கிறேன்.

உங்க எல்லாருக்கும் என்னோட Nude video-வ உங்க Whatsapp க்கு Send பண்ணிருக்கேன் .இனிமே உங்க எல்லாருக்கும் குழப்பமே வேண்டாம் .அந்த video வ எவ்வளோ நேரம் முடியுமோ திருப்பி திருப்பி உங்க வீட்ல இருக்குற அம்மா ,அக்கா ,தங்கச்சியோட பார்த்துட்டு ஏதாவது வித்யாசம் இருந்துச்சுன்னா. எத்தனை பேருக்கு வேணும்னாலும் Share பண்ணிக்கோங்க .

என்னோட பேரு இன்பா and இவரு என்னோட fiancé என்று தன்னுடைய மாப்பிள்ளையை அறிமுகம் செய்து வைக்கிறாள் . பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி கொள்கின்றனர்
ஒரு வயதான Reporter இன்பாவின் அருகில் வந்து ,அவளின் தலையில் தடவிக் கொடுத்து, "கொஞ்ச நாள் முன்னாடி நான் உன்ன பாத்திருந்தேனா ,என்னோட பொண்ண வீட்ட விட்டு அனுப்பிச்சிருக்க மாட்டேன், நல்லா இருமா " என்று சொல்லி விட்டு நடந்து செல்கிறார்.

"இங்க வந்த எல்லாருக்கும் எங்களோட நன்றி" என்று இன்பாவின் மாப்பிள்ளை சொல்ல,
பத்திரிகையாளர்களுள் ஒருவர் “அப்போ அவனுக்கு தண்டனையே கிடையாதா” என்று கேட்க

“அந்த மாமனிதருக்கு தண்டனையெல்லாம் கிடையாது , ஒரு gift மட்டும் இருக்கு , "எந்த பயத்த எனக்கு கொடுக்கணும்னு நெனெச்சாரோ ,அத அவரு கல்யாணத்துக்கு gift- ஆ கொடுப்பேன்" னு சொல்லிவிட்டு fiancé வை பார்த்து புன்முறுவல் செய்கிறாள்.

இருவரும் வாசல் தாண்டி நடந்து செல்கின்றனர் .வெளிச்சம் படர்கிறது.

காரில் இருவரும் ஏறுகின்றனர் . காரின் பின்புற கண்ணாடியில்

"குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் "

என்று எழுதப்பட்டிருக்கிறது .
இன்பா காரில் இருந்து ஒரு காகிதத்தை கசக்கி கீழே வீசி எறிகிறாள்.
அந்தக் காகிதம் விரிகிறது அதில் "அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு " என்று எழுதப்பட்டிருக்கிறது.
எழுத்து & இயக்கம்
கென்னடி ரீட்டா ஆன்டனி
அந்த website ல் உள்ள video-வை ஒரு கை delete செய்கிறது.
Black screen. (voice over ) : இன்பாவின் பெயர் சொல்லப்படாமல் அந்த விசயம் சம்பந்தமாக செய்தி தொலைக்காட்சியில் விழிப்புணர்வு செய்தியாக சொல்லப்படுகிறது .
ஒரு gift box வீட்டின் கதவை நோக்கி செல்கிறது ,அந்த gift box ல் "திருமண வாழ்த்துகள் ,அன்புடன் இன்பா " என்று எழுதப்பட்டிருக்கிறது . வீட்டின் கதவு திறக்கப்படுகிறது . ஒரு பெண் அதை வாங்குகிறாள் , பிரித்துப் பார்க்கிறாள் ,அவளது கணவன் "என்ன gift" என்று கேட்க , கோபத்துடன் அவள் அந்த gift box யை அவனிடம் காட்டுகிறாள் . அதில் இன்பா என்ற பெயரை பார்த்ததும் அதிர்கிறான் . அவள் அவன் கழுத்தைப் பிடிக்கிறாள் . Title Card போடப்படுகிறது.written by Kennedy antony coimbatore

About the WRITER

Kennedy antony

ABOVE PHOTOGRAPH WILL BE USED FOR

THE PARTICIPATION CERTIFICATE.

bottom of page