top of page
ALL INDIA
ASPIRING WRITER's
AWARD
SIVA SURYA S
REGISTRATION ID
B1745
YOUR FINAL SCORE IS IN BETWEEN
9.15 - 9.75
IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU.
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.
click on the below link to know more information about the FINAL ROUND
Written By
SIVA SURYA S
மருதமலையில் பூத்த பூ
மருத நிலத்தில் பேருந்தேறி, முல்லை நிலத்தில் பூத்த பூவொன்றை சந்திக்க புறப்பட்டான் சூர்யா.
வெளிச்சம் மங்கி இருள் கவ்வ தொடங்கியிருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்தான் சூர்யா. பேருந்து நகரத்திலிருந்து புறவழிச் சாலைக்குச் செல்லும் வரையில் ஒரே இரைச்சலாக இருந்தது. பேருந்து புறவழிச் சாலையை அடைந்தவுடன் தூய காற்று வீச ஆரம்பித்தது. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த சூர்யாவின் முகத்தில் சட்டென அந்த காற்று வீசியது. ஒருவித புத்துணர்ச்சியை கொடுத்தது அந்த காற்று. முல்லை நிலத்தில் வீசிய காற்று மருதம் வரை எதிரொலித்தது. தன்னை நுகரப்போகும் ஆண்மகன் இவன் தான் என்று தெரியாமல் அவன் முகத்தில் காற்று வீசி, அவன் மனதில் பூ மலரச் செய்தது அந்தப் பூவின் நறுமணம் .நறுமணத்தால் மயக்கமடைந்த சூர்யா இரவு நன்றாக தூங்கினான். சூரியக்கதிர் ஒளி சூர்யாவின் கண்களில் பட ,கண்ணைத் திறந்து பார்க்கிறான் சூர்யா. அவனாலேயே நம்ப முடியவில்லை, அவன் கண் ஆயிரக்கணக்கான சூரியகாந்தி பூக்களை பார்க்கிறது .இப்பொழுது திடீரென நேற்று முகர்ந்த அதே நறுமணம் வீச ஆரம்பிக்கிறது. ஆனால் அது எந்த பூவில் இருந்து வருகிறது என்று தெரியாமல் மூச்சடைக்கும் படி தவித்தான். பேருந்து தன் இலக்கை அடைந்தவுடன், தன் கரகர இஞ்ஜின் சத்தத்தை நிறுத்திக் கொண்டது. பிரம்மிப்பிலும், தவிப்பிலும், சற்று பதற்றத்திலும் இருந்த சூர்யா பேருந்து விட்டு கீழ் இறங்கி முல்லை நிலத்திலே கால் வைத்தான். முகத்தை தண்ணியால் கழுவி தன்னை நிதானபடுத்தினான். பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து போன் செய்தான் ."பஸ், பஸ் ஸ்டாண்டுக்குள்ள வரப்போகுது, சாரி ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுடா" என்று சொல்லி போனை கட் பண்ணினாள் . சூர்யாவுக்கு பரபரப்பு பற்றிக் கொண்டது. மூன்று வருட நட்பு அது. போனில் மட்டுமே இருவரும் பேசி இருக்கிறார்கள். காலையில் அந்த பேருந்து நிலையத்தில் நல்ல கூட்டம் .பள்ளி மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள், வேலைக்கு போகிறவர்கள் ,பேருந்து நிலையத்தில் ஒரு மூலையில் மல்லாந்து படுத்து உறங்கும் குடிகாரன் என வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த பேருந்து நிலையம். சூர்யாவின் தொலைபேசி மணி அடிக்கிறது. பரபரப்புடன் தொலைபேசியை எடுக்கிறான். "பஸ் உள்ள வந்துருச்சு நான் உன்ன பாத்துட்டேன்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறாள். இவன் திக்குமுக்காடி கூட்டத்தில் சுற்றி சுழன்று பார்க்கிறான் .அவளை காணவில்லை .நேற்று வந்த பூவின் நறுமணம், மீண்டும் அவன் மூக்கு நுனியில் பட ஆரம்பிக்கிறது. வாசனை வரும் திசை நோக்கி திரும்பி பார்க்கிறான் .தன் உடலை வளைத்து சிறு பிள்ளைக்குரிய கள்ளம் கபடம் அற்ற சிரிப்புடன் அந்த பூ பூத்துக் குலுங்கியது. நறுமணம் மீண்டும் இவனை மயக்கம் அடையச் செய்வது போல் இருந்தது. மயங்கி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அதே சிரிப்புடன், இவன் அருகே வருகிறாள். இவன் இன்னும் மயக்க நிலையிலேயே இருக்கிறான் ."எப்டி இருக்க" என்று பக்கத்தில் வந்து கேட்ட பிறகு தான் சற்று மயக்கம் தெளிந்தது அவனுக்கு. சற்று கூச்சத்துடன் பதில் அளித்தான். "நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க "என்று.அவள் பதில் ஏதும் அளிக்காமல் மீண்டும் பூத்துக் குலுங்கினாள். இவனுக்கு மீண்டும் மயக்கம் வருவது போல் இருந்தது. "சாப்பாடு பீஜியிலிருந்து எடுத்துட்டு வந்து இருக்கேன், சாப்பிடு" என்று அவன் கண்ணை பார்த்து ஒரு வித மெல்லிய குரலில் சொல்கிறாள் ."அப்பறமா அங்க போய் சாப்பிடலாம்" என்று கூச்சப்பட்டு கொண்டே பதில் அளிக்கிறான் சூர்யா. இருவரும் பேசிக்கொண்டே பேருந்தில் ஏறுகிறார்கள். சன்னல் சீட்டில் அவளும் அவள் பக்கத்தில் இவனும் அமர்ந்திருந்தான். பஸ் இஞ்ஜின் ஓடத் தொடங்கியது .பஸ்ஸில் சிறிய அதிர்வு வந்தது , பஸ் சிறிய அதிர்விலேயே எப்போதும் இருந்தது. பஸ் கண்டக்டர் விசில் அடித்ததும் ,பஸ் தனது வேண்டாத அழுக்கு காற்றை வெளியிட்டவாரே நகர ஆரம்பித்தது. பஸ் கூட்டமும் இல்லாமல், காலியாகவும் இல்லாமல், பாதி அளவிலான பயணிகளுடன் நகர ஆரம்பித்தது. பஸ் நகர ஆரம்பித்தாலும், உள்ளே சற்று புழுக்கமாகவே இருந்தது. அந்த புழுக்கத்திலும் பூ வாடாமல் அப்படியே மலர்ந்திருந்தது . சூர்ய வெளிச்சம் சூர்யாவின் கண்களின் வழியாக வெளியேறி பூவை வாடவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தது. பஸ் குலுங்கி குலுங்கி சென்று கொண்டிருந்தது. அந்த குலுங்களிலும் இருவரும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தனர். இருவரின் கைகளும் உரசிக்கொண்டது. நறுமணம் பஸ் எங்கும் பரவ ஆரம்பித்தது. புழுக்கம் குறைய தொடங்கியது. பூவை பூக்கச் செய்யும் ஒளியாக விளங்கினான் இவன். அவனை பூக்கச் செய்யும் மலராக விளங்கினாள் இவள். இவர்களுக்கு பின்னால் உள்ள சீட்டில் கூர்மையான கண்ணுடைய கத்திரிக்கோல் ஒன்று பூவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால், பூவின் இரண்டு இலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த கத்திரிக்கோல். இவனுக்கு இதை அவளிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று குழப்பம் .சொன்னால் தன்னை தவறாக நினைத்துவிடுவாளோ என்ற அச்சம் .விசில் சத்தம் கேட்கிறது. கூர்மையான கண்ணுடைய கத்திரிக்கோல் அங்கிருந்து இறங்கி விடுகிறது. பஸ் மீண்டும் குலுங்க ஆரம்பிக்கிறது. சூர்யா கூர்மையான கத்திரிக்கோல் பற்றி மறந்து, மீண்டும் அவளிடம் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பிக்கிறான். வள்ளியும் முருகனும், காதல் கொண்ட மலையை நோக்கி, அவனும் அவளும் சென்று கொண்டிருந்தனர். முருகன் அருள் புரிவாரா இல்லையா ?!என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆம், இருவரும் மூன்றாண்டு கால நண்பர்கள். இவ்வளவு காலம் பொறுத்திருந்து இப்பொழுது தான் முதல் சந்திப்பு நிகழ்கிறது. தற்போது மலையடிவாரத்தை அடைந்திருந்தனர் இருவரும். வெளியில் வெக்கை அடித்தாலும், இருவரும் குலுங்கிச்சிரித்ததில் குளிர்ந்திருந்தனர்.அந்த குளிர்ச்சியே அவர்களை வெக்கையில் இருந்து பாதுகாத்தது என்று சொல்லலாம் .தற்போது மயான அமைதி நிலவியது. இருவரும் பேசிக்கொள்ளாமலேயே சிறிது தூரம் நடந்தனர். பூவிற்கு வெளிச்சம் தந்து கொண்டே இருக்க, சூரியனாக சூர்யா அவள் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அவனது வார்த்தைகள் காற்று போல பூவை அசைத்தது .பேருந்தேறி குறிஞ்சியில் இன்னொரு தரம் பூக்க, மலை உச்சிக்கு அவனுடன் அவள் சென்று கொண்டிருந்தாள். பூவை வெளிச்சமூட்டி மகிழ்ந்து கொண்டிருந்த சூரியன், தற்போது பூவை தனது கரங்களால் தாங்கி பிடித்தது. பூ ஒடிந்து கீழே விழுந்து விடாமல் தாங்கிக் கொண்டது. முருகனும், வள்ளியும் முதல் சமிக்கை கொடுத்துவிட்டார்கள் போலும். பேருந்து மலை
வளைவில் சட்டென வளைந்து, அவளை வளைத்து, இவன் தாங்கி, முருகன் லீலை ஆரம்பமாகியது. சூரியன் தற்போது மலைக்கோயில் கோபுரம் மேல் உதிக்க தொடங்கியிருந்தது. மலையுச்சியில் ஓர் இடத்தில் இரு பூக்கள் மொட்டுவிட தொடங்கியிருந்தன. இருவரும் காலணியை கழற்றிவிட்டு, படியில் கால் வைத்து. கோயில் நோக்கி படி ஏற ஆரம்பித்தனர் .கையில் புகைப்படம் எடுக்கும் கருவியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். "போட்டோ எடுக்கலாமா" என்று அவள் அவனிடம் கேட்டாள். "மேல போயிட்டு வந்து எடுப்போம்" என்று பதில் சொல்கிறான் அவன். குரங்குகள் படி முழுக்க தனது சேட்டைகளை காண்பித்துக் கொண்டிருந்தது. மலையுச்சி கோவிலை அடைந்திருந்தனர் இருவரும் ,முருகனை தரிசிப்பதற்கு முன்பாகவே கோயிலை சுற்றினர் .வெளியில் பல்லக்தில் ஒரு முருகன் வந்து கொண்டிருந்தார். முருகனருகே இவர்கள் சென்றதும் ஒரு மேக கூட்டம் ,இவர்கள் மேல் சூழ்ந்து கொண்டது. ஒரு நிமிடம் ,கண்மூடி வாய் அசைத்து வேண்டினாள். முருகனும் நகர்ந்தார் மேக கூட்டமும் அங்கிருந்து நகர்ந்து முருகன் போகும் திசை நோக்கிச் சென்றது. கோவில் உள்ளே இருக்கும் முருகனைப் பார்க்க வரிசையில் பலர் காத்திருந்தனர். இவர்கள் அந்த வரிசையில் நின்றால் வெகு நேரம் ஆகிவிடும் என்று எண்ணி .கோயில் வாசல் அருகே சென்று முருகனைக் காணலாம் என்று எண்ணி எக்கி எக்கி பார்க்கின்றனர். முருகனும் வள்ளியும் தெரிகின்றனர் .மீண்டும் கண் மூடி பிரார்த்திக்கிறாள். கோயிலில் மண்டபம் போல் இருக்கும் அமைப்பில் இடது ஓர சுவரில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கிறது. அதற்கு கீழ் தான் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த கண்ணாடியில் முருகனும் வள்ளியும் தெரிகின்றனர்.சூரிய ஒளி அந்தக் கண்ணாடி மீது பட்டு கண்ணாடியில் இருந்து வரும் சூரிய எதிரொலி இவர்கள் இருவர் மீதும் படுகிறது. இருவரும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்படுகின்றனர் .கண் திறந்த அவள் பக்கத்தில் இருக்கும் உண்டியல் அருகே சென்று அங்கிருக்கும் திருநீரை எடுத்து, அவன் நெற்றியில் வைக்க விரலை நெற்றி அருகே கொண்டு செல்கிறாள். அவனது முடி முழு நெற்றியையும் மறைத்துக் கொண்டிருந்தது. இவள் தனது இடது கையால் முடியை தூக்கி ,வலது கைவிரலில் இருந்த திருநீரை சிறியதாக நெற்றியில் பூசினாள். அவன் நெற்றியில் வைத்த திருநீர் சிறு துளி மழை போல் அவனது மூக்கில் விழுந்தது. இவள் தனது கை விரல்களால் அதைத் துடைத்து நெற்றியில் ஊதி தனது நறுமணத்தை மலை முழுக்க பரவச் செய்தாள். மலையில் இருந்த மற்ற பூக்கள் இதை சுவாசித்து பொறாமையும், அச்சமும் கொள்ள ஆரம்பித்தன. தன்னைவிட அழகான, நறுமணம் உடைய பூ பூத்து விட்டதோ என்று எண்ணி அச்சம் கொள்ள ஆரம்பித்தன. இருவரும் கோவில் வெளியே ஒரு திண்டில் உட்கார்ந்து இருந்தனர் .காற்று நல்ல பலமாக அடித்தது. இருவரும் காற்று அடிக்கும் திசை நோக்கி பார்த்தனர் .மொத்த ஊரும் சிறு எறும்பு போல் தெரிந்தது. ஆம் இயற்கைக்கு முன்னால் யாவரும் சிறியவர்கள் தாம் .மௌனமே வார்த்தைகளாகிவிட, காற்று மொழியாகிவிட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் தலைக்கு மேல் வெகு தூரத்தில் மேலே இருந்த கழுகு ஒன்று இவர்களை ஒரு சிறு எறும்பு போல் சிறியதாக தன் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தது. மேகம் கருக்க ஆரம்பித்தது, ஆனாலும் வெயில் அப்படியே அடித்துக் கொண்டிருந்தது. இருவரும் படியிறங்கி கீழ் வரும் போது புகைப்படம் எடுக்கும் நபர் அங்கு இல்லை .அவள் கண் அங்கும் இங்கும் தேடுகிறது அவரை. அப்பவும் காணவில்லை. இருவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். எவ்வளவு கைப்பேசி வந்திருந்தாலும் கேமராவில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது பலருது ஆசை போலும். காலணிகளை எடுக்க இருவரும் காலணிகளை வைத்த இடம் நோக்கி செல்கின்றனர் .மீண்டும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. இவன் தனது காலணிகளை சட்டென மாட்டிக் கொண்டான் .கல் தரை அது ,வெட்கை நிலத்தை பிளந்து கல்லை சூடாக்கி வைத்திருந்தது. இவள் ஒரு செப்பலை காலில் மாட்டும் பொழுது இவனது தோளை பிடித்துக் கொண்டு சட்டென மாட்டிவிட்டாள். இன்னொரு செப்பலை காலில் மாட்டும் பொழுது இவன் கீழே குனிந்து, அவளது செப்பலை எடுத்து அவள் கால் அருகே கொண்டு சென்றான். பூ திடீரென பஞ்சாக மாறியது. சூரிய வெப்பத்தில் தன்னை கரைத்துக் கொண்டது. மீண்டும் கருமேகம் வர தொடங்கியது .இவள் அவன் அன்பில் ,அவன் ஈர்ப்பில் இருந்து விடுபட்டு ."நானே செப்பல் மாட்டிக்கிறேன் இங்க வா மேல எழுந்திரு" என்று வார்த்தைகளால், கொடுக்காத முத்தங்களாக கொடுக்கிறாள் .இருவரும் படி வழியாக மலை இறங்க ஆரம்பிக்கின்றனர். அவள் மனதில் அவன் உயர்ந்து கொண்டே இருந்தான் .படி இறங்கும் வழியில் பசித்த பாட்டி புசிக்க பணம் தந்தாள். கடைகள் பல இருந்தும் வயதான பாட்டி கடையில் சிறு நெல்லி வாங்கி கடித்தால். முழுமையாக சாப்பிட்டபின் நெல்லிக் கொட்டைகளை கையில் சேர்த்து வழியில் குழி தோண்டி புதைத்து தண்ணீர் ஊற்றினாள். தன் மனதுக்குள்ளே கூறிக் கொண்டாள் "என்றோ ஒரு மரம் வளர்ந்தால், நம் நட்பின் அடையாளம் ,இல்லை! , குழப்பம் தான். குட்டைக் குழம்பி, தெளிவான நீராக மாறிதானே ஆக வேண்டும். காத்திருக்கிறேன். உன்னுடைய தூண்டிலில் மீனாக நான் சிக்க வேண்டும் என்றிருந்தால் என்னை யார் காப்பாற்ற முடியும் ,என்னை உன் மீன் தொட்டியில் போட்டு காலம் முழுக்க வளர்த்தாலும் எனக்கு நிறைவு தான் .என்னை வெட்டாதே .அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துக் கொள் அதுவே போதும். எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம். உன்னை பார்த்தால் மட்டும் போதும். நீ வேண்டுமானால் என்னை வெட்டிக் கொள். உன்னை பசியோடு வைத்திருக்க நான் விரும்பவில்லை!" என்று தன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள். "லூசு தண்ணி அதிகமா ஊத்துற" என்று அவன் சொல்ல சட்டென தண்ணி ஊற்றுவதை நிறுத்திக் கொண்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தாள். பக்கத்தில் பல்வேறு பூச்செடிகள் இருந்தன. பலமாக ஒரு காற்று அடித்தது. பூக்களும் புன்னகை புரிந்து தலையசைத்தது. "கீழ போறதுக்குள்ள தண்ணீ தவிச்சா என்ன பண்ணுவ" என்று கேட்கிறான். மறுபடியும் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் "தாகம் தணிக்க ,என்னை மலரச் செய்ய ,உன் அன்பெனும் தண்ணீர் ஊற்றி என்னை மரமாக வளரச் செய்ய நீ இருக்கும் பொழுது நான் ஏன் தாகத்திற்கு பயப்பட வேண்டும்".சில சமயம் தத்தித் தவழ்ந்து, சில சமயம் மான் போல படி இறங்கினார்கள். குறிஞ்சி நிலம் அன்று ஒரு காதல் கதையை தன் மலையினுள் புதைத்துக் கொண்டது. இயற்கையின் அருளால் அந்த விதை ,மரமாக வளர்ந்து, பல பறவைகளுக்கு காதல் கை கூடும் இடமாக இருக்குமா!?என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இவர்கள் மலையடிவாரத்தை அடைந்தபோது கல்யாணம் ஆகாத காதல் ஜோடிகள் பலர் ,காதற் கதை எழுத மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். காலை இவர்கள் நடந்து வந்த அதே மலையடிவார ரோட்டை மீண்டும் அடைந்திருந்தனர். ரோட்டின் இருபுறமும் கடைகளால் சூழப்பட்டிருந்தது. கரும்புச்சாறு கடைகளும், எள் மிட்டாய் கடைகளும், எள் மிட்டாய் வட்டமாக, சப்பட்டையாக தட்டப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. சிறிது தூரம் இருவரும் நடந்து கொண்டிருந்தனர். ஒரு கரும்புச்சாறு கடையில் இருவரும் நின்றனர் .கரும்புச் சாறை இருவரும் குடித்துக் கொண்டிருக்க, அவன் உதட்டை உற்று நோக்கினாள், அதில் மெல்லிய அழகான ஒரு கோடு இருந்தது. அதை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தால் கோடு ரோடாக மாறியது. இருவரும் தன்னந்தனியாக அந்த ரோட்டில் நடப்பதாக கற்பனை செய்தாள். "முடிவில்லாதது வாழ்க்கை என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்க, என்னுடைய முற்றும் முழுதாக உன்னை.இந்த வாழ்க்கை முடியும் வரை, இந்த ரோட்டில் உன் கைபிடித்து மெதுவாக நடக்க வேண்டும். ஓட வேண்டாம் ,அனுபவித்து வாழ்வோம். யார் அமைதியையும் குலைக்க வேண்டாம். ஒரு சட்டி குழைந்த பழைய சோறு கிடைத்தாலும் அதை உண்டு வாழ்வோம். யார் வயிற்றிலும் அடிக்க வேண்டாம், என்றோ ஒரு நாள் அனைவரும் பள்ளத்தில் விழுந்து புதைபட போகிறவர்கள் தான். உன்னோடு கைபிடித்து இந்த அழகிய ரோட்டில் நடக்க மட்டுமே விரும்புகிறேன். ரோல்ஸ் ராய்ஸ் வேண்டாம். என்னுடன் வா" என்று மீண்டும் தன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறாள். "போலாமா" என்று கேட்கிறான் .அவன் கண்ணை பார்த்தபடி அவனுடன் ரோட்டில் வெகு தூரம் நடக்க தயாரானாள்.சூரிய ஒளியும் மங்கி இருந்தது. பூவும் சற்று வாடி இருந்தது .இருவருக்கும் கொஞ்சம் பசித்தது. பஸ் ஏறி இருவரும், காலையில் பஸ் ஏறி இடத்திற்கு வந்தனர். ஒரு நீண்ட ரோட்டில் தற்போது அவனுடன், அவள் நடக்கலானாள். அவளுடைய கைப்பை தற்போது அவனுடைய தோள்களில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த நகரத்தில் பிரபலமான பிரியாணி கடை ஒன்றிற்கு வந்திருந்தனர். கடைக்குள் நுழைந்தவுடன் கை கழுவி நாற்காலியில் அமர்ந்தார்கள். இரு நாற்காலிகளும் பக்கத்தில் இருந்தன, ஆனால் சற்று இடைவெளி இருந்தது. பிரியாணி வந்தவுடன் இருவரும் சாப்பிட்டனர். தன் தட்டில் இருந்த சில சிக்கன் துண்டுகளை அவள் தட்டில் வைத்தான். "என்னால் சாப்பிட முடியவில்லை நீ சாப்பிடு" என்று சொல்லி. உண்மையில் சாப்பிட முடியாமல் அவன் அந்த துண்டுகளை அவள் தட்டில் வைக்கவில்லை. அவள் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக அங்கு வைத்தான் .அந்த சிக்கன் துண்டுகளை அவனைப் பார்த்துக் கொண்டே கடித்தாள். உரசாத நாற்காலி தற்போது உரசியது. தன் காலை ,தன் தொடை பகுதி வரை உள்ள ஒரு காலை அவன் கால் அருகே தன்னை அறியாமலேயே கொண்டு சென்றாள். கால் உரசியது. இருவரும் சகஜமாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தன் காலை அவன் கால் மீது போட்டுக் கொண்டாள். உஷ்ணம் பரவியது. ஆண் மயிலின் ஆட்டத்தை கண்டு பெண் மயில் அதன் அழகிலே மயங்கியது .விதை விதைத்த மலைப் பகுதியில், இரண்டு நாகப்பாம்பு ஒட்டிப் பிணைந்து நடமாடத் தொடங்கியது. மாலையாக இன்னும் சில மணி நேரங்களை இருந்தன .பஸ் ஏறி வணிக வளாகம் ஒன்றிற்கு சென்றனர். வெப்பம் அடங்கி சற்று குளிர்ந்தது. அந்த வணிக வளாகம் உள்ளேயும் சூர்யாவுக்கு உடல் வெப்பம் தணியாமல் இன்னும் சூடாகவே இருந்தது .இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். வெப்பம் நிறைந்த கை பூவின் குளிர்ந்த கைகளை பிடிக்க முயற்சித்தது. முதலில் தடுத்த பூ ,பிறகு இறுக்கமாக கையைப் பற்றிக் கொண்டது. இருவரும் உச்ச நிலைக்குச் சென்றனர். உச்சி முதல் பாதம் வரை ரத்த ஓட்டம் வேகமாக ஓடியது. இதயம் வேகமாக துடித்தது. கை பிடித்ததில் எல்லாம் தானாகவே வெளியேறியது. அவன் கையை விடாமல் பிடித்து தோளின் மேல் சாய்ந்தாள். சாண்ட்விச் வாங்கும் போதும் சாய்ந்து கொண்டே அவன் அருகே நின்று இருந்தாள். காதல் கொண்ட மயிலாக,பிணைந்த பாம்பாக ,முருகனும் வள்ளியுமாக, சூர்யாவும் அவளும் தற்போது ஒன்றி இருந்தனர் .போலீஸிடம் பஸ் ரூட் கேட்டு, பஸ்ஸில் ஏறி, பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்தனர். தற்போது இருள் கவ்வ தொடங்கியிருந்தது. இருவர் மனதிலும் சற்று இருள் கவ்வி இருந்தது. சட்டென அவள் தோளில் சாய்ந்து கொண்டு பேச ஆரம்பித்தான் "உன்னை விட்டு போக போறேனா?!,உன்னை விட்டுப் போகப் போறேனா?!"என்று திரும்பத் திரும்ப கேட்டான் .அவன் தலை அவள் மார்பிலும் கொஞ்சம் பட்டது ,அவள் ஏதும் சொல்லவில்லை. பேருந்து நிலையம் வந்தது. அவனுக்கு பயணத்தில் சாப்பிடுவதற்கு சில பொருட்கள் வாங்கித் தந்தாள். இவளை முதலில் பஸ் ஏற்றுவதற்கு சிறிது தூரம் இருவரும் நடந்தனர். அவள் ஏறுவதற்கான பஸ் அங்கு நின்றிருந்தது. இவர்கள் அந்த பஸ்ஸின் பின்புறம் நின்றிருந்தனர். இவனை திடீரென மார்போடு மார்பு சேர்த்து கட்டி அணைத்தாள். இவனும் கட்டி அணைத்தான் .அவள் இடுப்பில் தனது கையை வைத்து ஒரு அமுக்கு அமுக்கினான் .இருவரும் பரவசமடைந்தனர். இருவரும் பிரிய மனமில்லாமல் உடலால் பிரிந்தனர். அவள் பஸ்ஸில் ஏறினாள். இருவரின் கண்களும் பேசிக் கொண்டிருந்தன. பிரிவின் ஏக்கம் கண்களில் தெரிந்தது. இருவரும் தன் கைகளை அசைத்து தான் போய் வருகிறேன் என்று சைகை செய்து கொண்டனர் .பஸ் குலுங்க ஆரம்பித்தது. கண்கள் அப்போதும் பேசிக்கொண்டே இருந்தன. பஸ் நகர ஆரம்பித்தது. அவள் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்" இந்த பிரிவு, நாம் நீண்ட ஒரு ரோட்டில், முடிவில்லா அந்த ரோட்டில் பயணம் செய்வதற்கு தான். என் கண்ணே, கன்னத்தில் கன்னம் வைத்து, கண்ணுக்குள் உன்னை வைத்து ,இந்த நாள் நினைவுகளை எப்பொழுதும், எந்நாளும், எந்நேரமும் ,எந்நிமிடமும் எந்நொடியும் இதை மனதில் ஓட்டிப் பார்த்து மகிழ்வேன் .என் மகிழ்ச்சி, துன்பம் எல்லாம் இனி உன்னுடனே. எந்நிலையிலும் துன்புறாதே, உன்னை தூக்கி தாலாட்ட தாயாக நான் இருப்பேன்"....
About the WRITER
SIVA SURYA S
ABOVE PHOTOGRAPH WILL BE USED FOR
THE PARTICIPATION CERTIFICATE.
bottom of page